சென்னை: நெல்லை, தூத்துக்குடியில் வெளுத்து வாங்கி வரும் மழையானது இன்று இரவு வரை தொடரும். நாளை காலை முதல் மழை நின்று விடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் பெரும் வெள்ளம் ஏற்பட்டு ஊர்களுக்குள் புகுந்துள்ளது. நெல்லையில் பல இடங்கள் வெள்ளக்காடாகியுள்ளன. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மழை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் கூறுகையில், இன்று இரவு வரை மழை நீடிக்கும். நாளை காலை முதல் மழை நின்று விடும். இந்த மாவட்டங்களைப் பொறுத்தவரை பற்றாக்குறை வட கிழக்குப் பருவ மழைதான் பெய்துள்ளது. பல அணைகள் நிரம்பவே இல்லை.
தூத்துக்குடியில் வெள்ளம் வருமோ என்ற அச்சமே தேவையில்லை. காரணம், பாபநாசம் (41சதவீதமே நிரம்பியுள்ளது), மணிமுத்தாறு (56 சதவீதமே நிரம்பியுள்ளது) அணைகள் இன்னும் முழுமையாக நிரம்பவில்லை. எனவே தண்ணீர் திறந்து விடப்பட வாய்ப்பில்லை. அந்த அணைகள் நிரம்பினால்தான் அதிக அளவிலான தண்ணீர் வெளியேற்றத்தை எதிர்பார்க்க முடியும். மேலும் தென்காசி அணைகளிலிருந்து வரும் தண்ணீரும் குறைந்து விட்டது. தற்போது தாமிரபணியில் ஓடிக் கொண்டிருக்கும் தண்ணீரும் மழை நின்றதும், நாளை குறைந்து விடும்.
வட கடலோர மாவட்டங்களில் டிசம்பர் 17ம் தேதிக்குப் பிறகு நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது. நாளை இதுகுறித்த தெளிவான நிலை தெரிய வரும் என்று கூறியுள்ளார் பிரதீப் ஜான்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!
மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்
தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?
எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!
முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!
உழவனின் உயிர் நண்பன்!
தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!
{{comments.comment}}