நயன்தாரா பிறந்த நாள் ஸ்பெஷல்... நெட்பிளிக்ஸ் தரும் ஸ்வீட் சர்ப்பிரைஸ்.. ரசிகர்களே ரெடியா!

Nov 02, 2024,12:24 PM IST

சென்னை: வரும் நவம்பர் 18 ஆம் தேதி நயன்தாரா பிறந்தநாளை முன்னிட்டு, நயன்தாரா: பியான் தி ஃபேரிடேல் என்ற டாக்குமென்டரியை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரிலீஸ் செய்யவுள்ளது. ரசிகர்கள் மத்தியில்  இது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


சரத்குமார் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்  நயன்தாரா. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம்  பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதுடன், ஆண் ரசிகர் மனதிலும் நயன்தாரா ஆணித்தரமாக கால் பதித்தார்.




இதனைத் தொடர்ந்து இவரின் நடிப்பின் திறமையால் இவருக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உருவானது. தொடர்ந்து விஜய், அஜீத் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்த நயன்தாரா தற்போது பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து தமிழ் திரையுலகில் தொடர்ந்து வெற்றி நடிகையாக வலம் வருகிறார். 


தமிழ் சினிமாவில் 2010 களில் தொடங்கி இன்று வரை நடித்து வரும் நயன்தாரா, லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் அளவிற்கு உயர்ந்தும் இருக்கிறார். தமிழில் லேடி சூப்பர்ஸ்டாராக அழைக்கப்படும் முதல் நடிகை இவர்தான். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, என பல்வேறு மொழிகளிலும் நடித்து அசத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்த நிலையில் நயன்தாராவின் வாழ்க்கையில் அவர் சந்தித்த ஏற்ற இறக்கங்கள், சினிமாவில் அவரது வெற்றிமுகம், திருமணம் ஆகியவை குறித்து நயன்தாரா  பியாண்ட் தி ஃபேரிடேல் என்ற டாக்குமென்ட்ரி எடுத்துரைக்க இருக்கிறது. இந்த டாக்குமென்டரி நயன்தாராவின் பிறந்த நாளான வரும் நவம்பர் 18ஆம் தேதி அன்று netflix ஓடிடி தளத்தில் எக்ஸ்க்ளூசிவாக  பிரீமியமாக உள்ளது.


நயன்தாராவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அதிகம் வெளியில் பகிரப்படாத மற்றும் இதுவரை கண்டிராத அழகிய பக்கத்தை இந்த டாக்குமெண்டரி மூலம் ரசிகர்கள் கண்டு களிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாம். மேலும் தங்கள் கனவுகளையும் லட்சியங்களையும் அடைய நினைப்பவர்களுக்கு இந்த டாக்குமென்ட்ரி உத்வேகமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஒரு மகளாக, சகோதரியாக, வாழ்க்கைத் துணையாக, அம்மாவாக, தோழியாக, தொழில் துறையில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக, நயன்தாராவின் பல முகங்களை இந்த டாக்குமெண்டரியில் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியா முழுவதும் உள்ள நயன்தாரா ரசிகர்களுக்கு இந்த பிறந்தநாள் பரிசு எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

தங்கம் விலை நேற்று மட்டுமில்லைங்க இன்றும் குறைவு தான்... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

அதிகம் பார்க்கும் செய்திகள்