மொபைல் போனை தலைக்கு பக்கத்தில் வைத்து தூங்காதீர்கள்.. ஆப்பிள் நிறுவனம் அறிவுரை

Aug 24, 2023,09:47 AM IST
நியூயார்க் : மொபைல் போன்களை அருகில் வைத்து தூங்க வேண்டாம் என பிரபல ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், தனது வாடிக்கையாளர்களை நேரடியாக எச்சரித்துள்ளது.

மொபைல் போன்களை பக்கத்தில் வைத்துக் கொண்டு தூங்கினால் எந்த மாதிரியான உடல் நல பாதிப்புகள் ஏற்படும் என ஏற்கனவே பல கட்ட ஆய்வுகள் நடத்தி, மொபைல் போன் பயனாளர்களுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. இருந்தாலும் பலரும் தங்களுக்கு அருகிலும், தலையணைக்கு கீழும் மொபைல் போன்களை வைத்து தூங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.



இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் புதிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மொபைல் போன்களை அருகில் வைத்துக் கொண்டு தூங்க வேண்டாம். குறிப்பாக அருகிலேயே சார்ஜ் போட்டபடி வைக்க வேண்டாம் என வாடிக்கையாளர்களை கேட்டுக் கொண்டுள்ளது. காற்றாட்டம் உள்ள சூழலில், மே���ைகள் போன்ற தட்டையான இடத்தில் வைத்து மட்டுமே சார்ஜ் போடுங்கள்.

போர்வைகள், தலையணைகள் அல்லது உங்களின் உடல் போன்ற மென்மையான இடங்களில் வைத்து சார்ஜ் போடாதீர்கள்.

ஐபோன்கள், சார்ஜ் செய்யப்படும் போது அதிலிருந்து வெப்பம் வெளியேறும். இந்த வெப்பம் கடத்தப்படுவதற்கு சரியான இடம் கிடைக்காத போது அவைகள் எளிதில் தீப்பற்றவோ, வெடிக்கவோ அதிக வாய்ப்புள்ளது. ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோர் பெரும்பாலும் வைத்து சார்ஜ் போடும் தங்களின் தலையணை அதிக ஆபத்து நிறைந்த இடங்களில் ஒன்றாகும். 

பவர் அடாப்டர், வயர்லெஸ் சார்ஜர்கள், போன்கள் ஆகியவற்றை போர்வை, தலையணை அல்லது உங்களின் உடலுக்கு அடியில் வைத்து தூங்காதீர்கள். இவைகள் பவர்களை சேமித்து வைக்கக் கூடியவை. ஐபோன், சார்ஜர், அடாப்டர் போன்றவற்றை நீங்கள் பயன்படுத்தாத சமயத்தில் சார்ஜ் செய்வதற்கு பயன்படுத்தும் இடத்தை விட தூரமாக வையுங்கள். பழுதான கேபிள்கள் அல்லது சார்ஜர்களை ஈரபதம் உள்ள பகுதிகளில் வைத்து பயன்படுத்த வேண்டாம் என்றும் ஆபிள் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

செந்தில் பாலாஜிக்கு முற்றும் நெருக்கடி.. முன்ஜாமின் மனு தள்ளுபடி.. அடுத்து என்ன நடக்கும்?

news

தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 3-ல் திமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்

news

டெல்லி ஜந்தர் மந்தரில் உச்சக்கட்ட பாதுகாப்பு: மாணவர்கள் போராட்டம் தீவிரமடைய வாய்ப்பு

news

சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் நெய்மர்

news

திருநாவுக்கரசர் நாயனார்.. நான்கு சைவக்குரவர்களில் முதன்மையான அப்பர் சாமிகள்!

news

கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அஜிங்க்யா ரஹானே அறிவிப்பு!

news

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடிசெய்தது ஹைகோர்ட்

news

70 வயது தேவ் ஆனந்த் மகனின் மரணம் சொல்லும் செய்தி.. 2வது ஹார்ட் அட்டாக் அபாயகரமானது?

news

நட்பு .. அன்பென்ற சொல்லின் உன்னதமான உயிர்ப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்