சென்னை: தவெக கட்சியின் உறுப்பினர் சேர்க்கை செயலியை நாளை மறுநாள் அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்து வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் வரும் ஞாயிற்று கிழமை தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் பனையூரில் உள்ள தவெக கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மதுரையில் ஆகஸ்ட் 25ம் தேதி நடைபெறும் மாநாடு குறித்தும், கட்சியின் அடுத்த கட்ட பணிகள் குறித்து பேச உள்ளதாக தெரிகிறது. இந்த மாநாட்டில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிகிறது.

நாளை மறு நாள் நடக்கும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தவெக கட்சியின் உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலியை தவெக தலைவர் விஜய் அறிமுகப்படுத்த உள்ளார். செலியை பயன்படுத்துவதற்கான பயிற்சியும் அந்த கூட்டத்தில் அளிக்கப்பட உள்ளது. செயலியை அறிமுகம் செய்து வைத்தவுடன் புதிய உறுப்பினர் சேர்க்கை தொடங்கும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஒவ்வொரு முகவர்களும் உறுப்பினர்களின் இல்லத்திற்கு சென்று உறுப்பினர் சேர்க்கை செய்ய வேண்டும். வேறு இடத்தில் இருந்து உறுப்பினர் சேர்க்கைய செய்தால் செயலி செயல்படாத வண்ணம் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
உறுப்பினர் சேர்க்கை குறித்து அவ்வப்போது தலைவர்கள் சரிபார்ப்பார்கள். தவறாக பதிவு செய்திருந்தால் முகவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அதே போல அதிக உறுப்பினர்களை சேர்க்கும் நிர்வாகியை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று விஜய் சந்தித்து கவுரவிப்பார் என்று கூறப்பட்டு வருகிறது.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}