சென்னை: சென்னை, அடையாறு பகுதியில் கணவன், மனைவி, குழந்தை என பீகாரைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அதே மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

26.01.2026 அன்று காலை, ஜே.2 அடையாறு காவல் நிலைய எல்லையிலுள்ள இந்திரா நகர், 1வது அவென்யூ, ஹோண்டா ஷோரூம் அருகில் இருந்த ஒரு சாக்கு மூட்டையிலிருந்து இரத்தம் வழிவதாக வந்த தகவலின்படி, உடனடியாக சம்பவயிடம் சென்ற போலீசார் சாக்கு மூட்டையினுள் இறந்த நிலையில் தலையில் வெட்டு காயங்களுடன் இருந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை கைப்பற்றி, இராயப்பேட்டை அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பினர்.
இது சம்பந்தமாக ஜே.2 அடையாறு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தனித்தனி சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
புலன்விசாரணையில், இறந்த நபர் பீகார் மாநிலம், ஷேக்பூரா மாவட்டம், பக்தியார்புர் என்ற ஊரைச் சேர்ந்த கௌரவ்குமார் என்றும், அவர் வேலை தேடி தனது மனைவி மற்றும் 2 வயது ஆண் குழந்தையுடன் சென்னைக்கு வந்ததாகவும் தெரியவந்தது.
மேலும், சந்தேகத்தின் பேரில், 27.01.2026 அன்று சத்யேந்தர் (எ) சந்தோஷ்குமார் (ஆ/30), என்பவரை விசாரணை செய்ததில், பீகார் மாநிலம், நாளந்தா மாவட்டம், அலிப்பூர் என்ற ஊரைச் சேர்ந்தவர் என்றும், அவர் கோட்டூர்புரத்திலுள்ள Institute of Chemical Technology கல்லூரியில் பகல் நேர வாட்ச்மேனாக வேலை செய்து வருவதாகவும், தனக்குத் தெரிந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மேற்படி கௌரவ்குமார் தன்னிடம் வேலை கேட்டதாகவும், 24.01.2026 அன்று அவருக்கு வேலை வாங்கித் தருவதாக் கூறி, பீகாரைச் சேர்ந்த கௌரவ்குமாரை அவரது மனைவி மற்றும் குழந்தையுடன் அழைத்து வந்து மேற்படி கல்லூரி வளாகத்தில் பயன்பாட்டில் உள்ள ஒரு கட்டிடத்தின் நான்காவது தளத்தில் தன்னுடன் தங்க வைத்துள்ளார்.
மேலும் விசாரணையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த லலித் யாதவ் (40) என்பவரும், மேற்படி கல்லூரியில் இரவுநேர வாட்ச்மேனாக வேலை செய்து வருவதாகவும், பீகார் மாநிலம், பாட்னா மாவட்டம் பக்தியார்புர் என்ற ஊரைச் சேர்ந்த விகாஷ் குமார் (24) என்பவர் கொட்டிவாக்கத்தில் உள்ள ஒரு அப்பார்ட்மென்டில் வாட்ச்மேனாக வேலை செய்வதாகவும் தெரியவந்தது.
சம்பவத்தன்று (24.01.2026) இரவு பீகாரைச் சேர்ந்த கௌரவ்குமார், சத்யேந்தர் (எ) சந்தோஷ்குமார், லலித் யாதவ், விகாஷ் குமார் ஆகிய நால்வரும், மேற்படி கௌரவ்குமார் தங்கியிருந்த மேற்படி கட்டிடத்தின் நான்காவது தளத்தில் அமர்ந்து மது அருந்தியதாகவும், அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில், சத்யேந்தர் (எ) சந்தோஷ்குமார், லலித் யாதவ், விகாஷ்குமார் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து கௌரவ்குமார், அவரது மனைவி மற்றும் ஆண் குழந்தை ஆகியோரை கை மற்றும் இரும்பு ராடால் தாக்கி கொலை செய்து, அன்று இரவே சடலங்களை, சாக்கு மூட்டைகளில் கட்டி வெவ்வேறு இடங்களில் வீசிச் சென்றதாக தெரியவந்தது.
விசாரணையில், இறந்த குழந்தையின் சடலம் மத்திய கைலாஷ் பக்கிங்காம் கால்வாயில் கிடைக்கப்பெற்றது. மேலும், இறந்த கௌரவ்குமாரின் மனைவி சடலம் தரமணி மாடர்ன் பிரட் அருகில் குப்பைத்தொட்டியில் வீசியதால், அவரது சடலத்தை பெருங்குடி குப்பைக்கிடங்கில், போலீஸார், மாநகராட்சி ஊழியர்களுடன் ஒருங்கிணைந்து தீவிரமாக தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இவ்வழக்கில் தொடர்புடைய எதிரிகளான, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சத்யேந்தர் (எ) சந்தோஷ்குமார் (வ/30), லலித் யாதவ் (வ/40) மற்றும் விகாஷ்குமார் (வ/24) ஆகியோரை கைது செய்து, விசாரணைக்குப் பின்னர் இன்று (29.01.2026) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.
எதிரிகள் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, அதிகபட்ச தண்டனையைப் பெற்றுத் தர தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தியாவின் வீரத் திருமகன்கள்: தேசிய தியாகிகள் தினச் சிறப்பு
தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.4,800 குறைவு
2 மனைவி.. வாரத்துல ஆளுக்கு 3 நாள்... ஞாயிற்றுக்கிழமை லீவு.. டைம்டேபிள் எப்பூடி!
2026 தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக 50 இடங்களில் போட்டியா?
சென்னையில் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில்.. பீகாரைச் சேர்ந்த 3 பேர் கைது
50 சட்டசபைத் தொகுதிகளுக்கு பாஜக சுற்றுப்பயண பொறுப்பாளர்கள்.. அண்ணாமலைக்கு எத்தனை?
ஓபிஎஸ்.,க்கு இடமில்லை...ஸ்டாலினுக்கு அனுபவமில்லை...விஜய் தலைவரே அல்ல...வெளுத்து வாங்கிய இபிஎஸ்
நான் ரெடி.. அருமை அண்ணன் இபிஎஸ்ஸுடன் பேச டிடிவி தினகரன் தயாரா.. ஓ.பி.எஸ். அதிரடி சவால்!
பிப்ரவரி 3ம் தேதி கூட்டணியை அறிவிக்கும் தேமுதிக.. யாருடன் இணைகிறது?
{{comments.comment}}