சென்னை: இதுவரை இப்படி ஒரு சாதனை தமிழ்நாட்டின் வரலாற்றில் இல்லை. ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோயில் குடமுழுக்குகள் நிகழ்ந்துள்ளன என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையான மற்றும் சிதிலமடைந்த நிலையில் இருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்கள், தொல்லியல் துறை வல்லுநர்களின் ஆலோசனையோடு ஆகம விதிப்படி புதுப்பிக்கப்பட்டுள்ளன. பல தசாப்தங்களாகக் குடமுழுக்கு காணாத சிறிய கிராமக் கோயில்களுக்குக் கூட நிதி ஒதுக்கப்பட்டு, விழாக்கோலம் பூண்டுள்ளது. இது கிராம மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசின் இந்தத் தொடர் ஆன்மீகப் பணிகள், தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் ஒரு முக்கியப் பங்காகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தள பக்கத்தில்,

ஆயிரமாவது குடமுழுக்கு - மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் திருக்கோயில் (2023)
2 ஆயிரமாவது குடமுழுக்கு - மயிலாடுதுறை - கீழப்பரசலூர் வீரட்டேஸ்வரர் திருக்கோயில் (2024)
3 ஆயிரமாவது குடமுழுக்கு - நாகை - திருப்புகலூர் அக்னீஸ்வரர் திருக்கோயில் (2025)
4 ஆயிரமாவது குடமுழுக்கு - இன்று, பெரம்பூர் சேமாத்தம்மன் திருக்கோயிலில்...
இதுவரை இப்படி ஒரு சாதனை தமிழ்நாட்டின் வரலாற்றில் இல்லை! மதவாத அரசியல் செய்வோர்க்குத் தமிழ்நாட்டில் இடமில்லை! என்று தெரிவித்துள்ளார்.
காலம் எனும் மரம்!
அஞ்சா மங்கை.. வீரத் தளபதி குயிலி பற்றி உங்களுக்குத் தெரியுமா?
ராகுல் காந்தி - கனிமொழி திடீர் சந்திப்பு ஏன்? பின்னணி நடக்கும் பரபரப்பு அரசியல்
நித்தம் நித்தம் நெல்லுச்சோறு.. உண்ணும் போது செய்ய வேண்டியவை செய்யக் கூடாதவை!
எப்படி இருந்த செங்கோட்டையன் இப்படி ஆகிவிட்டாரே: நயினார் நாகேந்திரன்
தானத்தில் சிறந்த தானம்!
புன்னை மரம்!
நகைப்பிரியர்களுக்குப் பேரதிர்ச்சி: ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்கம் விலை!
தியேட்டர்களை விழுங்கப் போகிறதா ஓடிடி.. OTT vs Theatre!
{{comments.comment}}