பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Jan 27, 2026,01:57 PM IST

சென்னை: பெண்கள் தான் நம் சமூகத்தின் முதுகெலும்பு. அவர்கள் முன்னேறாமல் எந்த நாடும் வளர முடியாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.        


தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் கீழ் இயங்கும் 'தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம்' சார்பில், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் உலக மகளிர் உச்சி மாநாடு 2026 இன்று தொடங்கியது. 2 நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்பின்னர் அவர் பேசுகையில், ஒரு கோடியே 30 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை என்பது இதுவரை யாரும் செய்யாத வரலாற்று சாதனை. இந்நியாவில் உள்ள மற்ற மாநிலங்களும் நம்மை பார்த்து பின்பற்றி வரக்கூடிய சாதனை இது.




உயர் பொறுப்பில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் வரவேண்டும். சமூகத்தின் முதுகெலும்பாக பெண்கள் உள்ளனர். மகளிர் நலன் காக்கும் திராவிட மாடலின் நீட்சியாகதான் தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம் அமைந்திருக்கிறது. பெண்களின் உடல்நலனைப் பேணும் வகையில், கருப்பைவாய் புற்றுநோயை தடுக்க, 14 வயதுடைய பெண் குழந்தைகளுக்கு HPV தடுப்பூசியை செலுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளோம்.


மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கக்கூடிய பெண்கள் முன்னேறாமல் எந்த நாடும் வளர முடியாது. பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு. தந்தை பெரியார் நூறாண்டுகளுக்கு முன்பே வலியுறுத்திய கருத்து இது தான். ஒவ்வொரு பெண்ணும் கல்வி கற்க, சுதந்திரமாக வாழ, மரியாதையான ஊதியம் பெற உரிய கட்டமைப்பை உருவாக்குவோம். பெண்களின் முன்னேற்றத்திற்காக ஏராளமான திட்டங்களை கலைஞர் கருணாநிதி கொண்டு வந்தார். சொந்த பெண்களுக்கு பங்கு, காவல்துறையில் பெண்கள் என்று நீண்ட பட்டியலை சொல்ல முடியும் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விஜய்யின் நிலைப்பாடு என்ன என புரியவில்லை... செங்கோட்டையன் விவகாரம் குறித்து டிடிவி தினகரன் விளக்கம்

news

பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

தங்கம் விலை இன்று சற்று குறைந்தது ... வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.400 நோக்கி உயர்வு!

news

ஜெபின்!

news

யார் குப்பைக்காரன்?

news

டிங்டாங் டாங் டிங்டாங்.. இரண்டும் ஒன்றோடு ஒன்று.. அது ஏன் நிமிஷத்துக்கு 60 விநாடி?

news

ஜனநாயகன் பட வழக்கை மீண்டும் தனி நீதிபதி விசாரிக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவு

news

பண்டைய தமிழர்களின் வாழ்வியல் தொகுப்பு.. ஆயகலைகள் 64 அறிவோமா?

news

மதுரையிலிருந்து ஏன் என்னை வம்புக்கு இழுக்கிறீர்கள்.. எம்.எல்.ஏ தளபதிக்கு ஜோதிமணி கேள்வி

அதிகம் பார்க்கும் செய்திகள்