சென்னை: பத்தாம் வகுப்பு பொது தேர்வில் புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. விருப்ப பாடத்திற்கும் தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயித்து தமிழக பள்ளி கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்வு முறையில் பள்ளி கல்வித்துறை அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. மலையாளம், இந்தி, உருது உள்ளிட்ட மொழிகளை விருப்பப்படமாக தேர்வு செய்யும் மாணவர்களுக்கு அதில் தேர்ச்சி பெறுவதும், பத்தாம் வகுப்பு பொது தேர்வில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10ம் வகுப்பில் விருப்ப பாடமாக எடுக்கும் பாடத்திற்கு கட்டாயம் மதிப்பெண் எதுவும் இதுவரை நிர்ணயம் செய்யவில்லை. அதாவது பாஸ் மார்க் என்று எதுவும் இல்லை. 10 வகுப்பு சான்றிதழிழிலும் மதிப்பெண் விவரம் மட்டுமே பதிவு செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிறுபான்மை மொழி அமைப்புகளை சேர்ந்த சிலர், விருப்ப பாடத்திற்கும் உரிய மதிப்பெண் தர வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை தொடர்ந்து உச்ச நீதிமன்ற தீர்ப்பு அளித்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி விருப்ப பாடத்திற்கும் தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயித்து தமிழக பள்ளி கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், தமிழை தாய் மொழியாகக் கொண்டு விருப்ப பாடம் தேர்வு செய்யாத 10ம் வகுப்பு மாணவர்கள் தற்போதுள்ள வழக்கப்படி ஐந்து பாடங்களில் தேர்ச்சி பெற்றால் போதும். ஆனால் தமிழ் அல்லது ஆங்கிலத்தை தாய் மொழியாக கொள்ளாத மாணவர்கள் இனி விருப்பப்படத்திலும் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம்.
அந்த வகையில் விருப்ப பாடத்திற்கான தேர்ச்சி மதிப்பெண் 35 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ் அல்லாத சிறுபான்மை பள்ளியில் பயிலும் மாணவர்கள் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உடன் விருப்ப பாடத்திற்கான தேர்ச்சி மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி உருது, தெலுங்கு,மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட விருப்ப படங்களில் பெரும் மதிப்பெண்களும் இனி சான்றிதழ்களில் அச்சிட்டு தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் பயிலும் மாணவர்களுக்கு இதுவரை உள்ள நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை. அடுத்த கல்வி ஆண்டிலிருந்து தான் இந்த புதிய நடைமுறை செயல்பாட்டிற்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
{{comments.comment}}