ராமநாதபுரம்: சாமானிய மக்களின் ஏழை பிள்ளைகளை படிக்கவிடாமல் கூலி தொழிலுக்கு அனுப்புகிற திட்டம் தான் புதிய கல்விக்கொள்கை திட்டம் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி - பணகுடி பேரூராட்சிக்கு உட்பட்ட நதிப்பாறையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 13 இலட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடை கட்டிடத்தை திறந்து வைத்தார் சபாநாயகர் அப்பாவு. அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசுகையில், சாமானிய மக்களின் ஏழை பிள்ளைகளை படிக்கவிடாமல் கூலி தொழிலுக்கு அனுப்புகிற திட்டம் தான் புதிய கல்விக்கொள்கை திட்டம். இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று நமது முதல்வர் தெளிவாக சொல்லிவிட்டார்.
இந்த திட்டத்தை 2022ல் பீகார் மாநிலம் ஏற்றுக்கொண்டது. பீகார் மாநிலத்தில் இத்திட்டத்தை ஏற்றுக்கொண்ட போது 51 சதவீதம் பேர் பள்ளிக்கு வந்தனர். இதை ஏற்றுக்கொண்ட பின்னர் தற்போது இந்தாண்டு 31 சதவீதம் பேர் பள்ளிக்கு வந்துள்ளனர். 20 சதவீதம் தோல்வியுற்ற பிள்ளைகளை வீட்டிற்கு அனுப்பி விட்டனர். இதனால் அந்த பிள்ளைகள் கூலி தொழிலுக்கு செல்கின்றனர். சாமானிய ஏழை பிள்ளைகளை படிக்க விடாமல் கூலி தொழிலுக்கு அனுப்பும் திட்டம் தான் புதிய கல்வி கொள்கை திட்டம். இதனால், இத்திட்டத்தை தமிழக முதல்வர் ஏற்றுக்கொள்ள மாட்டார்.

இந்தியை மட்டும் படித்து தமிழை அழிக்க வேண்டும் என்பதற்காகவே மூன்றாவது மொழி படிக்க கூறுகின்றனர். மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்காது. எங்கள் பிள்ளைகள் தமிழ், ஆங்கிலம் படித்தே உலகம் முழுவதும் வேலைக்குச் செல்கின்றனர். 'சமக்ர சிக்க்ஷா' போன்ற திட்டங்கள் மூலம் ஒன்றிய அரசு மும்மொழிக் கொள்கையை திணிக்கிறது.
உலகில் தோன்றிய முதல் 3 மொழிகளில் ஒரு மொழி தான் தமிழ் மொழி. இன்றும் அறியாமல் இருக்கின்ற மொழி. பல நாடுகளில் ஆட்சி மொழியாக இருக்கிறது தமிழ்மொழி. இந்த மொழியை அழிப்பதற்கு தான் இந்தி மொழி திணிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
தாத்தா பாட்டிகள் தினம்.. கொண்டாடுவோம் இந்தக் குழந்தைகளையும்!
சத்தம் ஏதுமின்றி... மௌனமாய் விழிகளில்!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
விநாயகப் பெருமானை வழிபட்டு.. தடைகள் நீங்கி வெற்றி பெற.. வர சதுர்த்தி!
ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் இன்று சற்று குறைந்தது... இதோ இன்றைய விலை நிலவரம்!
மக்கள் ஆதரவை இழந்து விட்டது திமுக.. அடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிதான் - பாஜக
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
ஜனவரி 25 விஜய் தலைமையில் தவெக செயல் வீரர்கள் கூட்டம்
கனவும் அலட்சியமும் – கல்வி வளாகத்தின் கதை!
{{comments.comment}}