சென்னை: ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் நாளை வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டு வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த மாதம் 29ஆம் தேதி ஃபெஞ்சல் புயலாக உருவானது. இதன் எதிரொலியாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் அதிக கன மழை முதல் மிக கனமழை வரை கொட்டி தீர்த்தது. மீனவர்கள் மீன் பிடி தொழிலை இழந்து தவித்தனர். மறுபக்கம் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் கனமழை காரணமாக பல்வேறு ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெய்த அதீத கன மழையால் தாழ்வான பகுதிகள் மற்றும் குடியிருப்புகள் தண்ணீர் சூழ்ந்தது. நகரின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கின. முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டன. மக்கள் உடைமைகளை இழந்து கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். மழைநீர் மெல்ல மெல்ல வடிந்து தற்போது தான் நிலைமை சீராகி உள்ளது.
இந்த நிலையில் வங்க கடலில் மீண்டும் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தெற்கு வங்கக் கடலின் மத்தியில் உருவாகும் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வட மேற்கு திசையை நோக்கி நகரக்கூடும் எனவும், இது டிசம்பர் 12ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து தமிழக- இலங்கை கடலோரப் பகுதிகளை அடையக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இது புயலாக மாறுமா, ஃபெஞ்சல் புயலைப் போல அதீத மழையைக் கொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் டிசம்பர் மாதத்தில் வழக்கத்தை விட அதி தீவிர மழை கிடைக்கும் என்று பல்வேறு வானிலை ஆர்வலர்களும் தெரிவித்துள்ளதால், புதிய காற்றழுத்தத் தாழ்வால் நல்ல மழை கிடைக்க வாய்ப்புண்டு என்று எதிர்பார்க்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
9 மாவட்டங்களுக்கு இன்று கனமழையும்.. நெல்லைக்கு மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் : வானிலை மையம் தகவல்!
திமுக ஆட்சியில் சென்னை ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிட்டது: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!
சுகாதாரமற்ற குடிநீரை வழங்கி தமிழக மக்களைக் காவு வாங்கத் துடிக்கிறதா திமுக அரசு?: நயினார் நாகேந்திரன்
நெல் கொள்முதல் ஈரப்பத விகிதத்தை உயர்த்துக.. பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டம்.. குழந்தைகளை கெடுக்க நினைத்த திமுக அரசு: அன்புமணி ராமதாஸ்!
கோவை வரும் பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி!
சார் படிவத்தை நிரப்புவதில் குழப்பமா.. கவலைப்படாதீங்க.. சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு
வாட்ஸ் ஆப்புக்கு வந்துருச்சு ஆப்பு.. எலான் மஸ்கின் X-சாட் தான் டாப்பாமே.. மக்கா!
SIR பணிகளைப் புறக்கணித்து.. போராட்டத்தில் குதித்த வருவாய்த்துறை ஊழியர்கள்
{{comments.comment}}