சென்னை: வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அது தற்போது உருவாக ஆரம்பித்து விட்டதாக தமிழ்நாடு வெதர்மேன் தகவல் வெளியிட்டுள்ளார்.
வட கிழக்குப் பருவ மழையின் அடுத்த முக்கிய கட்டம் தொடங்கவுள்ளது. அதாவது புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகவுள்ளதாக சில நாட்களாக வானிலை மையம் அறிவித்து வந்தது. தற்போது அது உருவாகத் தொடங்கி விட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில், நிக்கோபார் தீவுகள் - பண்டா அசே அருகே காற்றழுத்தத் தாழ்வு உருவாகத் தொடங்கியுள்ளது. இது மேலும் தீவிரமடைந்து மேற்கு வட மேற்கு திசையில் நகரக் கூடும். இருப்பினும் இதன் போக்கு குறித்து ஞாயிற்றுக்கிழமைதான் நமக்கு தெளிவாக தெரிய வரும்.

இப்போதே இதற்கு பெயரிடுவது சரியாக இருக்காது. வானிலை மையம்தான் அதற்கு பெயரிட முடியும். ஒரு வேளை இந்த தீவிரமடையாமல் தொடர்ந்து காற்றழுத்தமாகவே இருந்தால் என்னாகும்.. எனவே இப்போதே பெயரிடாதீர்கள் என்று கூறியுள்ளார் பிரதீப் ஜான்.
இருப்பினும் இந்த குறைந்த காற்றழுத்தத்தால் தமிழ்நாட்டுக்கு நல்ல மழை கிடைக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இயல்பான அளவிலிருந்து சற்று கூடுதலாக வட கிழக்குப் பருவ மழை கிடைத்துள்ளது. தோராயமாக 6 சதவீதம் கூடுதல் மழை கிடைத்துள்ளது. பகுதி பகுதியாக வட கிழக்குப் பருவ மழை தமிழ்நாட்டுக்கு நல்ல மழையைக் கொடுத்து வருகிறது.
தென் மாவட்டங்களில் நல்ல மழை கிடைத்துள்ளது. டெல்டாவிலும் நல்ல மழைப்பொழிவு காணப்பட்டது. மேற்கு மாவட்டங்களிலும் குறிப்பிடத்தக்க அளவில் மழை பெய்துள்ளது. வட மாவட்டங்களைப் பொறுத்தவரை இதுவரை நார்மலாகவே பெய்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
உன்னையே கதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா!
{{comments.comment}}