- ஸ்வர்ணலட்சுமி
2024 ஆம் ஆண்டின் நிறைவில் இருக்கிறோம். புது வருடம் 2025 ஐ நாம் எதிர்நோக்கிக் காத்து கொண்டு இருக்கிறோம். 2024ம் ஆண்டு நம் அனைவரின் வாழ்விலும் நல்லவை மட்டுமல்லாது நல்ல அனுபவங்கள், நல்லவை அல்லாத அனுபவங்கள், நல்ல எண்ணங்கள், நல்லவை அல்லாத எண்ணங்கள் என எத்தனையோ கொடுத்துள்ளது.
வழக்கமாக எந்த பண்டிகை, கொண்டாட்டம் என்றாலும் யாரோ தயாரித்து, வடிவமைத்த படங்கள், எழுதிய வாசகங்கள் அடங்கிய போட்டோக்களை கூகுளில் டவுண்லோடு செய்து, அவற்றை அப்படி வாட்ஸ்ஆப்பில் ஃபார்வர்டு செய்து விட்டு, அவரவர் தங்களின் வேலைகளை பார்க்க சென்று விடுவதை தான் அநேகமானவர்கள் செய்கிறார்கள். உண்மையாகவே உணர்ந்து, மனதார வாழ்த்தை பகிரும் பழக்கம் என்பது அடியோடு காணாமல் போய் விட்டது.

வரவிருக்கும் புத்தாண்டான 2025 ல் நம் நண்பர்களுக்கும், உறுவினர்களுக்கும் அருகில் இருப்பவர், தொலை தூரத்தில் இருப்போருக்கு, சிறியவர், பெரியவர், தம்பதியர், தங்களின் மகன், மகளுக்கு, உடல் பிறந்தோருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வோம். வாழ்த்துக்களை எப்படி எல்லாம் பகிர்ந்து பிறரை மகிழ்விக்கவும், ஊக்குவிக்கவும், புத்தாண்டு வாழ்த்துக்களை பயன்படுத்தி, அர்த்தமுள்ள வாழ்த்தாக அனுப்பலாம் என்பதை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம்.
1. கடந்து வந்த 2024 ம் ஆண்டிற்கு மனமார்ந்த நன்றியை கூறி புது ஆண்டு 2025 ஐ உற்சாகத்தோடும், மகிழ்ச்சியோடும் வரவேற்போம். இனிய புத்தாண்டு 2025 நல்வாழ்த்துக்கள்.

2. இறைவன் அருளால் 2025 ம் ஆண்டு நம் எல்லோர் வாழ்விலும் உடல்நலம், நீண்ட ஆயுள், நிறைவான செல்வம், உயர்ந்த புகழ், மெய் ஞானம் பெற்று மேலோங்கி வாழ்வோம்.

3. 2025 புத்தாண்டில் நல்ல முயற்சிகளும் நல்ல உறுதி மொழிகளும் நம் வாழ்க்கை கனவுகளும் நிறைவேறும் ஆண்டாக அமையட்டும்.

4. 2025 இந்த புத்தாண்டு உங்களுக்கு மன அமைதி, மன மகிழ்ச்சி, மன நிறைவு, மன உறுதி தந்து, மேலோங்கி வாழ இனி புத்தாண்டு வாழ்த்துக்கள்.

5. ஜனவரி 01 சிறப்புடன் பிறந்தது... சிந்தனையில் தெளிவும்...மனதில் ஒளியும்...எண்ணங்களில் உறுதியும் வாழ்வில் புத்துணர்ச்சியும் பெற்று வாழ்க வளமுடன். இனி புத்தாண்டு 2025 வாழ்த்துக்கள்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வாயில் வடை சுடும் அரசு இது அல்ல... சாதனை திட்டங்களை செயல்படுத்தி வரும் அரசு: முதல்வர் முக ஸ்டாலின்!
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு தமிழக அரசின் 8 திட்டங்கள் குறித்து அறிவிப்பு: முதல்வர் முக ஸ்டாலின்
பாமக.,வில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்...அன்புமணி அறிவிப்பு...என்ன செய்ய போகிறார் ராமதாஸ்?
ராஜ்ய சபா சீட் கொடுத்தால் மட்டுமே பேச்சுவார்த்தை: பிரேமலதா விஜயகாந்த் அதிரடி!
சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' பட கதை திருட்டு புகாரில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சம வேலைக்கு சம ஊதியம்: போராடிய ஆசிரியர்கள் மீது அடக்குமுறை: அண்ணாமலை கண்டனம்!
ஜனநாயகன் இசை வெளியீட்டுக்காக மலேசியா புறப்பட்டார் விஜய்
போராட்டத்தில் திடீர் பரபரப்பு... மயங்கி விழுந்த ஆசிரியை... பதற்றத்தில் போராட்டக் களம்!
கரை தேடி வந்து உயிர்களை உள்வாங்கிய தினம்...!
{{comments.comment}}