பொறுமையும், புத்திசாலித்தனமும் மிகுந்த கன்னி ராசிக்காரர்களே பிறக்க போகும் 2025ம் ஆண்டு உங்களுக்கு உயர்வுகள் தரக் கூடிய உன்னதமான ஆண்டாக இருக்கும். இருந்தாலும் எதையும் திட்டமிட்டு, நேரடி கவனத்துடன் செய்வது நன்மைகளை அதிகரிக்கும். உங்களின் திறமை மற்றவர்களால் பாராட்டப்படும். புதிய பொறுப்புகள் வந்த சேரும். வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும்.
எதையம் சமாளிக்கும் திறமை அதிகரிக்கும். வருமானத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்கள், வீடு, மனை வாங்குவீர்கள். மனதில் இருந்து வந்த தயக்கங்கள், பயம் குறையும். வாக்குறுதிகளை அளிக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாருடனும் வாக்குவாதங்கள் செய்வதை தவர்க்க வேண்டும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உணவு பழக்கங்களில் கவனம் அவசியம். உறவுகள் மத்தியில் உங்களின் செல்வாக்கு உயரும்.

தடைபட்ட சுப காரியங்கள் குலதெய்வ அருளால் கை கூடும். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். புதிய நட்புகள் உருவாக வாய்ப்புள்ளது. பூர்வீக சொத்து கைக்கு வரும். வாழ்க்கை துணையுடன் சிறு சிறு பிரச்சனைகளை தவிர்க்க வேண்டும். செய்யும் தொழிலில் வளர்ச்சி அதிகரிக்கும். நேர்மையான செயல்பாடுகளால் லாபம் அதிகரிக்கும்.
அரசு மற்றும் அரசியல் சார்ந்தவர்களுக்கு மேலிடத்தின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்கள் மற்றவர்கள் பேச்சைக் கேட்டு வரும் வாய்ப்புக்களை தவற விட வேண்டாம். மாணவர்கள் படிப்பில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். வாகன பயணத்தில் வேகத்தை தவிர்க்க வேண்டும்.
ஆரோக்கியத்தில் கடந்த ஆண்டில் இருந்த பிரச்சனைகள் தீரும் என்றாலும் முதுகு, கழுத்து, தோள்பட்டை பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதும், சரியான நேரத்தில் உரிய சிகிச்சைகளை எடுத்துக் கொள்வது நல்லது.
2025ம் ஆண்டில் நிதி நிலையில் முன்னேற்றம் இருக்கும். சேமிப்புகளும், முதலீடுகளும் நல்ல பலனை தரும். புதிய முயற்சிகள் உங்களின் நம்பிக்கையை அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
பரிகாரம் : காளி அம்மன் வழிபாடும், நரசிம்மர் வழிபாடுகள் மனதிற்கு புத்துணர்ச்சியையும், நன்மைகளையும் அதிகரிக்க செய்யும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!
மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!
தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!
தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!
{{comments.comment}}