பேச்சுத்திறமையால் மற்றவர்களை கவரும் தன்மை கொண்டவர்கள் உங்களுக்கு பிறக்க போகும் புத்தாண்டு தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் கொடுக்கும். பலம், பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.
எண்ணங்கள் ஒவ்வொன்றாக ஈடேற துவங்கும் வருடமாக 2025 உங்களுக்கு இருக்க போகிறது. எதிலும் நேரடி கவனமும், விடா முயற்சியும் வைப்பது அவசியம். பணியிடத்தில் ஏற்ற, இறக்கமான நிலை இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் வரலாம். மேலதிகாரிகளிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். எதிரிகள் பலம் அதிகரிக்கலாம். கையெழுத்திடும் போது நன்கு படித்து விட்டு, கவனமாக இருப்பது நல்லது.

பண விஷயத்தில் அவசரம் காட்டாதீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பதால் குடும்பத்தில் அமைதி நிலைத்திருக்கும். சுப காரியங்கள் கைகூடும். வரவை சேமிக்க பழகுங்கள். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம். மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் ஒதுங்கி இருப்பது தேவையற்ற பிரச்சனைகளில் சிக்காமல் இருக்க வைக்கும்.
கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருங்கள். செய்யும் தொழில் இருந்த தேக்க நிலை மாறும். உழைப்பிற்கு ஏற்ற வளர்ச்சி இருக்கும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். பொது இடுங்களில் வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்க வேண்டும். கலை துறையினருக்கு திறமை ஏற்ற வளர்ச்சி இருக்கும். வெளிநாட்டு பயணத்தின் போது கவனமாக இருக்க வேண்டும்.
வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. சுளுக்கு, பல், மூட்டு பிரச்சனைகள் வரலாம். பரம்பரை நோய்களின் தாக்கம் படிப்படியாக குறையும். ஆரோக்கிய விஷயங்களில் கவனமுடன் இருக்க வேண்டும். வாகன பயணங்களின் போது நிதானம் அவசியம். உறவுகள் விஷயங்களில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத பயணங்களால் சோர்வும், புதிய அனுபவமும் கிடைக்கும்.
பெண்களுக்கு குடும்பத்தில் உங்களின் ஆலோசனைக்கு தாமதமாக மதிப்பு கிடைக்கும். தம்பதிகள் புரிதலை அதிகரித்து கொள்வது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாள வேண்டும்.
புதிய ஆண்டுகளில் பெரிய அளவில் பிரச்சனைகள், பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க ஸ்ரீரங்கம் பெருமாளையும், தாயாரையும் வழிபட்டு வருவது நல்லது. பெருமாளை வழிபடுவதால் குடும்பத்தில் இருக்கும் குழப்பங்கள், தடைகள் படிப்படியாக குறையும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஸ்கூல் பெஞ்ச்.. என் ஸ்கூல் அனுபவங்கள் (பார்ட் 1)
விண்வெளியில் இந்தியாவின் வரலாற்று சாதனை.. புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை செலுத்தியது
CJP in Crisis: காக்ரோச் ஜனதாக் கட்சியில் திடீர் பிளவு.. புதிய அமைப்பு பிறந்தது!
அரசு பள்ளி மாணவர்களுக்கு கணினி கல்வி மறுக்கப்படுகிறதா?.. 60,000 கணினி ஆசிரியர் குடும்பங்கள் கேள்வி
வானொலியுடன் என்றும் இணைந்து இருங்கள்: மாணவர்களுக்கு அறிவிப்பாளர் வேல்முருகன் அறிவுரை
It's Okay mean, It's not Okay. But it's Okay
செல்வமா? செல்வாக்கா?
"கதிரவனாய் இருக்கிறாய் மெழுகுவர்த்தியாய் தியாகம் செய்கிறாய்!"
கொட்டுகிற மழையினிலே குடையின்றி நடந்து வந்தேன் !
{{comments.comment}}