பா. அகிலா
டெல்லி: உலகில் புத்தாண்டு முதலில் பிறக்கும் நாடு மற்றும் கடைசியாக புத்தாண்டு பிறக்கும் நாடு குறித்த தகவல்கள் இதோ.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31-ம் தேதி இரவு வந்துவிட்டாலே உலகமே கொண்டாட்டத்தில் மூழ்கிவிடும். ஆனால், உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் புத்தாண்டு பிறப்பதில்லை. கால நேர மாற்றங்களின் (Time Zones) அடிப்படையில், ஒரு நாடு புத்தாண்டை வரவேற்கும்போது, மற்றொரு நாடு இன்னும் முந்தைய நாளின் மதிய வேளையிலேயே இருக்கும். அப்படி உலகில் முதலில் மற்றும் கடைசியாக புத்தாண்டு எங்கு பிறக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள நீங்கள் ஆவலாக இருக்கிறீர்களா? இதோ உங்களுக்கான சுவாரசியமான தகவல்கள் இதோ...
இந்திய நேரப்படி எந்தெந்த முக்கிய நகரங்களில் எப்போது புத்தாண்டு பிறக்கிறது என்பது குறித்த விவரங்களை வரைகலை வடிவில் தற்போது பார்க்கலாம். உலகின் கிழக்குக் கோடியில் பசிபிக் கடலில் உள்ள சின்னஞ்சிறு தீவான கிரிபாதிதான் (KIRIBATI) புத்தாண்டு முதலில் பிறக்கும் இடம். இந்திய நேரப்படி இங்கு 31ஆம் தேதி மாலை 3.30க்கு புத்தாண்டு பிறக்கிறது. ஆஸ்திரேலியாவின் மெல்பர்னில் மாலை 6.30 மணிக்கும், ஜப்பானின் டோக்கியோவில் இரவு 8.30 மணிக்கும் புத்தாண்டு பிறக்கிறது. சீன தலைநகர் பெய்ஜிங்கில் இரவு 9.30 மணிக்கு புத்தாண்டு உதயமாகிறது. துபாயில் நள்ளிரவு 1.30 மணிக்கும் புத்தாண்டு பிறக்கிறது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நள்ளிரவு 2.30 மணிக்கும், பிரிட்டன் தலைநகர் லண்டனில் ஒன்றாம் தேதி அதிகாலை 5.30 மணிக்கும் புத்தாண்டு உதயமாகிறது. அமெரிக்காவின் நியூயார்க்கில் ஒன்றாம் தேதி காலை 10.30 மணிக்கும், லாஸ் ஏஞ்சலிஸில் பிற்பகல் ஒன்றரை மணிக்கும் புத்தாண்டு பிறக்கிறது. பூமிப்பந்தின் மேற்குக் கோடியில் உள்ள பேக்கர் (BAKER) தீவில் இந்திய நேரப்படி ஒன்றாம் தேதி மாலை 5.30க்கு புத்தாண்டு பிறக்கிறது. இதுதான் கடைசியாக புத்தாண்டு பிறக்கும் இடமாகும். உலகின் கிழக்குக் கோடியில் புத்தாண்டு பிறந்து 26 மணி நேரம் கழித்துதான் மேற்கு கோடியில் புத்தாண்டு பிறக்கிறது என்பது சுவாரசிய தகவல்.
(பா. அகிலா, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
100 கோடி நன்கொடை! கான்பூர் ஐஐடி மாணவர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல்!
டிக் டிக் டிக்... கடிகாரம் மாட்டும் திசையை வைத்து வீட்டின் நன்மைகள் இருக்காம்... இதோ முழு விபரம்!
தானத்தில் சிறந்த தானம் எது தெரியுமா?
கரூர் சம்பவ வழக்கு...விரைவில் விஜய்க்கு சம்மன் அனுப்ப வாய்ப்பு
எங்கள் விவகாரத்தில் தலையிட நீங்கள் யார்?.. மதிமுக, விசிக, கம்யூ.களுக்கு காங். எம்.பி. கேள்வி
முக்கிய முடிவுகள்?.. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன. 6ல் அமைச்சரவைக் கூட்டம்
திருவாதிரையில் ஒரு வாய் களி.. சரி அதை விடுங்க.. களி பிறந்த கதை தெரியுமா?
உலகில் புத்தாண்டு முதலில் பிறக்கும் நாடு... கடைசியாக புத்தாண்டு பிறக்கும் நாடு எது தெரியுமா?
2026 புத்தாண்டில் தமிழக அரசியல் எப்படி இருக்கும்? ஒரு அலசல்
{{comments.comment}}