Happy new year 2024: நியூசிலாந்தைத் தொடர்ந்து.. ஆஸ்திரேலியாவிலும் பிறந்தது புத்தாண்டு!

Dec 31, 2023,07:10 PM IST

ஆக்லாந்து: உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு 2024 பிறந்தது. இந்திய நேரப்படி மாலை 4. 30 மணிக்கு நியூசிலாந்து நாட்டில் புத்தாண்டு பிறந்தது. இதைத் தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலியாவுக்கும் புத்தாண்டு வந்து விட்டது.


புத்தாண்டையொட்டி ஆக்லாந்தில் உள்ள ஸ்கை டவர் பகுதியில் மிகப் பெரிய அளவில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் பட்டாசுகள் வெடித்தும், ஆடிப் பாடியும், கேக் வெட்டியும் புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர்.




ஆக்லாந்து நகரில்தான் உலகிலேயே முதல் முறையாக புத்தாண்டு பிறக்கிறது என்பதால் அந்த நகரில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டியிருந்தன. ஆக்லாந்து முழுவதும் கோலகலமான கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன.  புத்தாண்டின்போது இங்கு விதம் விதமான முறையில் பட்டாசுகள் வெடிக்கப்படும். அது உலகப் புகழ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த பட்டாசுகளை  வெடிக்க பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதுண்டு. ஆறு மாதமாகவே இதற்கு திட்டமிடுவார்கள். கிட்டத்தட்ட 500 கிலோ அளவிலான பட்டாசுகள் வெடிக்கப்படும். இந்த வான வேடிக்கை பார்க்கவே படு ஜோராக இருக்கும்.


நியூசிலாந்தைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் புத்தாண்டு பிறந்தது. அந்த நாட்டின் சிட்னி நகரில் பல ஆயிரம் பேர் திரண்டு புத்தாண்டை வரவேற்றனர். சிட்னி ஓபரா பகுதியில் கூடியிருந்த மக்கள் புத்தாண்டை வரவேற்று பட்டாசுகள் வெடித்தும், ஆடிப் பாடியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

சமீபத்திய செய்திகள்

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

அதிகம் பார்க்கும் செய்திகள்