டெல்லி: வாகனங்களின் கண்ணாடி முகப்பில் ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டாமல் வரும் வாகன ஓட்டிகளிடம் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
2008 இன் கீழ் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் மூலம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதன்படி, தேசிய நெடுஞ்சாலையில் பயன்படுத்துவோர் மத்தியில், மின்னணு கட்டண வசூல் அமைப்பான ஃபாஸ்டேக்ஐப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் பொருட்டு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அத்துடன், ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதில், தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களின் முகப்பு கண்ணாடியில் வேண்டுமென்றே ஃபாஸ்டேக் வில்லைகள் ஒட்டாமல் இருப்பதை தடுக்க இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, முகப்பு கண்ணாடியின் உள்பக்கத்தில் பாஸ்டேக் வில்லை ஒட்டாத வாகனங்கள் சுங்கச்சாவடியை கடக்கும் போது அந்த வாகனங்களுக்கு இரு மடங்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாஸ்டேக் வில்லைகளை வேண்டுமென்றே ஒட்டாமல் வருவது, சுங்கச்சாவடிகளில் தேவையற்ற காலதாமதத்தை ஏற்படுத்துவதுடன், தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்துவோருக்கு அசவுகரியங்களையும் ஏற்படுத்துகிறது. எனவே நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சுமார் 45 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கான தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுமார் 1000 சுங்கச்சாவடிகளில், பாஸ்டேக் இல்லாத வாகனங்களிடம் இரு மடங்கு கட்டணம் வசூலிக்க இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கை தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவோருக்கு தடையற்ற சுகமான பயணத்தை உறுதி செய்யும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
RIP Deva: ‘தேனிசைத் தென்றல்’ தேவா மறைந்தார்.. கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலி!
விஜய்யை முதலில் பாட வைத்தவர்.. ரஜினிகாந்த்துக்கு Title Vibe கொடுத்தவர்.. மறக்க முடியாத தேவா!
தேனிசை வானில் கலந்தது!
ஊருக்கு தான் உபதேசமா?: முதல்வர் விஜய்யை கடுமையாகச் சாடிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
இளையராஜா -தேவா சந்திப்பு கடைசி வரை நடக்காமலேயே போய் விட்டதே!
களவும் கற்று மற.. இந்தப் பழமொழியோ நிஜமான அர்த்தம் என்ன தெரியுமா?
காவ்யா மாறன் இனி ரஜினிகாந்த்தை எப்படிக் கூப்பிடுவார் தெரியுமா? - அனிருத்துடன் தேதி குறிச்சாச்சு!
தென்தமிழ் தலையங்கம்: உலக காயங்கள் தினம் - கணப்பொழுதில் மாறும் வாழ்க்கை - ஒரு எச்சரிக்கை மணி!
கிளிகள் கூவும் தேனிசை தந்தவர் - தேவா!
{{comments.comment}}