சென்னை: சென்னை மற்றும் திருப்பூரில் நடந்த என்.ஐ.ஏ சோதனையில் வங்கதேச நாட்டை சேர்ந்த சஹாபுதீன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையின் புறநகர்களான படப்பை, பள்ளிக்கரணை, மறைமலை நகர், பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். முன்னரே பதிவு செய்யப்பட்டிருந்த வழக்குகளின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது.
இந்த சோதனையின் போது, படப்பையில் வசித்து வரும் சஹாபுதீன் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. போலி ஆதார் அட்டை தயாரித்து இந்தியாவில் ஊடுருவி பணி செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று மறைமலைநகர் பகுதியில், ஜூஸ் கடையில் வேலை செய்து வந்த முன்னா, மற்றும் அவருடன் என்பவரும் கைது செய்யப்பட்டனர். இதேபோல திருப்பூரில் நடந்த சோதனையில் 4வது நபர் சிக்கினார்.
இந்தியர்களை போன்று போலி ஆவணங்களை தயாரித்து ஏன் வசித்து வந்தார்கள். இவர்களுக்கு யார் யாருடன் தொடர்பு இருக்கிறது. ஏன் இவ்வாறு செய்தார்கள் என்ற கோணத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

விசாரணைக்கு பின்னர் தான் முழுமையான தகவல் அளிக்கப்படும் என என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்.. குலச்சிறை நாயனார் !
தமிழுக்கு ஓர் இழப்பு!
ரீல்ஸ் மோகம்!
{{comments.comment}}