வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரக் கட்சி வேட்பாளர் போட்டியில் உள்ள இந்திய வம்சாவளி அமெரிக்கப் பெண் தலைவரான நிக்கி ஹாலி, போட்டியில் முன்னணியில் உள்ள டொனால்ட் டிரம்ப் மீது கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட முன்னாள் அதிபரான டிரம்ப் களத்தில் குதித்துள்ளார். அவரே தற்போது முன்னணியிலும் உள்ளார். பலரது ஆதரவும் அவருக்கே கிடைத்து வருகிறது. இந்தப் போட்டியில் விறுவிறுப்பாக முன்னேறி வந்த விவேக் ராமசாமி தனக்கு போதிய ஆதரவு கிடைக்காததால் போட்டியிலிருந்து விலகி டிரம்ப்புக்கு ஆதரவாக மாறி விட்டார்.
இருப்பினும் இப்போட்டியில் இன்னொரு இந்திய வம்சாவளி அமெரிக்கரான நிக்கி ஹாலி தொடர்கிறார். அவர் டிரம்ப்புக்கு எதிரான தனது விமர்சனத்தை தீவிரப்படுத்தி வருகிறார். டிரம்ப் அதிபராக இருந்தபோது ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக செயல்பட்டவர் ஹாலி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது டிரம்ப்புக்கு எதிரான போட்டியில் அவர் முனைப்பு காட்டி வருகிறார்.

டிரம்ப் குறித்து ஹாலி கூறுகையில், டொனால்ட் டிரம்ப்புக்கு மன நலம் சரியில்லை. வயதும் ஆகி விட்டது. அவரால் அதிபர் பதவியில் மீண்டும் செயல்படுவது பொருத்தமாக இருக்காது. 2021ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி அமெரிக்க கேபிடலில் நடந்த சம்பவத்திற்குக் காரணமானவர் அவர். அவரை அமெரிக்கர்களால் மன்னிக்கவே முடியாது.
கேபிடல் கலவரத்தை தொடர்ந்து நியாயப்படுத்தி வருகிறார் டிரம்ப். என் மீது அவர் குற்றம் சாட்டுகிறார். கேபிடல் கலவரத்தின்போது நான் அங்கேயே இல்லையே.. பிறகெப்படி என்னால் அதை சமாளிக்க முடியும்.. நான் சமாளிக்க வேண்டும் என்று அதிபராக இருந்த அவர் எப்படி எதிர்பார்க்கலாம்.
80 வயதுகளில் இருக்கும் ஒருவர் நமக்கு அதிபராக வேண்டுமா. ஏற்கனவே ஒரு அதிபர் இருக்கிறார். அவர் தடுமாறிக் கொண்டுள்ளார். இன்னும் ஒரு வயதான அதிபர் நமக்குத் தேவைதானா. உலகமே பற்றி எரிந்து கொண்டிருக்கும்போது இந்த வயதானவர்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்றார் ஹாலி.
இதற்கிடையே, டொனால்ட் டிரம்ப் தரப்பிலிருந்து நிக்கி ஹாலிக்கு ஒரு ஆபர் போயுள்ளது. அதாவது துணை அதிபர் பதவியை தருவதாக டிரம்ப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஆபரை நிக்கி ஹாலி நிராகரித்து விட்டாராம். ஒரு வேளை டிரம்ப்பின் டீமில் நிக்கி ஹாலி இணைந்தால், துணை அதிபரானால், அந்தப் பதவிக்கு வந்த 2வது இந்திய அமெரிக்க வம்சாவளி துணை அதிபர், 2வது இந்திய அமெரிக்க வம்சாவளி பெண் துணை அதிபர் என்ற பல பெருமைகளை அவர் அடைய நேரிடும். ஆனால் அந்த வாய்ப்பை ஹாலி நிராகரித்து விட்டார்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}