சென்னை: மக்களின் இதயங்களை கவரும் வகையில் இசைஞானி இளையராஜாவின் இசையில் நினைவெல்லாம் நீயடா படத்தின் பாடல்கள் சமீபத்தில் புதுச்சேரியில் சிறுவர்களால் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்தப் படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
இளையராஜாவின் "நி" வரிசைப் படங்கள் அல்லது பாடல்கள் என்று ஒரு லிஸ்ட்டே போடலாம்.. காரணம், அத்தனையும் செம ஹிட்.. சூப்பர் ஹிட். ஏற்கனவே இளையராஜாவின் அசத்தலான இசையில் நினைவெல்லாம் நித்யா என்ற படம் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று அனைத்து பாடல்களும் ஹிட் கொடுத்தது. அந்தப் படத்தில் இடம் பெற்ற நீதானே என் பொன்வசந்தம் .. இன்று வரைக்கும் மக்களின் இதயங்களை குடைந்து எடுக்கும் பாட்டு.
தற்போது அதே பாணியில் இளையராஜாவின் துள்ளலான இசையில் உருவாகியுள்ள படம்தான் நினைவெல்லாம் நீயடா. இப்படத்தில் 5 பாடல்கள் அமைந்துள்ளதாம். அதிலும் குறிப்பாக இதயமே.. இதயமே.. இந்தப் பாடலை இளையராஜா எழுத, யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளாராம். இப்படத்தின் பாடல்கள் எல்லாம் மக்கள் மனதில் நீங்கா இடம் தரும் வகையில் அமைந்துள்ளதாம். இது இளையராஜாவின் 1417 வது படம். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் புதுச்சேரியில் சிறுவர்களால் படக்குழுவினர் ரிலீஸ் செய்தனர்.
இப்படத்திற்கு இயக்குனர் ஆதிராஜன் கதை, திரைக்கதை, வசனங்களை, எழுதி இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே சிலந்தி, ரணதந்த்ரா (கன்னடம்), அருவா சண்டை,ஆகிய படங்களை இயக்கியவர். லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் இப்படம் மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இப்படத்திற்கு ராஜா பட்டார்சார்ஜி ஒளிப்பதிவு செய்ய, ராயல் பாபு தயாரித்துள்ளார்.
இதில் பிரஜின் நாயகனாகவும், மனிஷா யாதவ் நாயகியாகவும், நடித்துள்ளனர். சினாமிகா இப்படத்தின் மூலம் மற்றொரு நாயகியாக அறிமுகமாகியுள்ளார். இவர்களுடன் ரோகித், யுவலட்சுமி, ரெடின் கின்ஸ்லி, மனோபாலா, மதுமிதா, டைரக்டர் ஆர்.வி உதயகுமார், முத்துராமன், பி எல் தேனப்பன், ரஞ்சன் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
பள்ளி பருவத்தில் வரும் காதலை மையமாகக் கொண்டு இப்படம் அமைந்துள்ளது. பள்ளிப் பருவ காதலை பிரதிபலிக்கும் ஆட்டோகிராப், பள்ளிக்கூடம், காதல் 96, படங்களை தொடர்ந்து நினைவெல்லாம் நீயடா படமும் வெற்றி பெற்று மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}