பாரீஸ்: பாரீஸில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு மத்தியில் அங்கு இந்தியா ஹவுஸ் திறக்கப்பட்டுள்ளது. அப்போது இந்தியாவில் 2036ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த முயற்சித்து வருகிறோம் என்று சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் உறுப்பினரும், ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானியின் மனைவியுமான நீதா அம்பானி கூறியுள்ளார். இதனால் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுமா என்ற சுவாரஸ்யமான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தியாவில் காமென்வெல்த் போட்டிகள், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுள்ன. அதேபோல கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர்களும் நடைபெற்றுள்ளன. ஆனால் உலகக் கோப்பைக் கால்பந்து மற்றும் ஒலிம்பிக் போட்டிகள்தான் இன்னும் கனவாகவே உள்ளன. இந்த இரு சர்வதேச போட்டிகளும் இதுவரை இந்தியா பக்கமே வந்ததில்லை.
இந்தியாவில் கால்பந்துப் போட்டிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளன. ஆனாலும் கூட உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியை நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாத நிலைதான் இன்னும் உள்ளது. அதேபோல ஒலிம்பிக் போட்டியும் இதுவரை இந்தியாவில் நடைபெற முடியாமல் உள்ளது.

இந்த நிலையில் பாரீஸ் ஒலிம்பிக் கிராமத்தில், இந்தியா ஹவுஸ் தொடங்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவன உதவியுடன் இது தொடங்கப்பட்டுள்ளது. இதை நீதா அம்பானி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பிடி உஷா, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அப்போது நீதா அம்பானி கூறுகையில், 2036ம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒலிம்பிக்ஸை நடத்த தீவிரமாக முயற்சித்து வருகிறோம். ஒலிம்பிக் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியா ஹவுஸ் திறக்கப்பட்டுள்ளது.
இந்தியா ஹவுஸில் இந்தியாவின் கலை, கலாச்சாரம், பாரம்பரியம், இசை, நடனம், இந்திய உணவுகள், பாலிவுட் இசை, தொழில்நுட்பம் என அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கம். சர்வதேச நாடுகளின் வீரர், வீராங்கனைகளின் இந்தியாவின் செழுமையான பாரம்பரியத்தை அறிய இது உதவும் என்றார் நீதா அம்பானி.
இந்தியாவில் நடந்த முதல் உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரை ரிலையன்ஸ் நிறுவனம்தான் ஸ்பான்சர் செய்து நடத்தியது. முகேஷ் அம்பானியின் தந்தை திருபாய் அம்பானிதான் அதை நடத்தி சர்வதேச நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் என்பது நினைவிருக்கலாம். அதன் பின்னர்தான் இந்தியாவிலும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்த முடியும் என்று சர்வதேச நாடுகள் கருதின. இதையடுத்துதான் பல்வேறு சர்வதேச போட்டிகள் இந்தியாவை நோக்கி வந்தன என்பதும் முக்கியமானது.
நீதா அம்பானி வாய் முகூர்த்தம் பலிக்கட்டும்.
கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை
ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?
தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!
மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு
செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!
ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்
அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு
அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?
சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?
{{comments.comment}}