சீன அதிபர் ஜின் பிங்குக்கு வாழ்த்து சொன்ன கைலாசா.. நித்தியானந்தா வேற லெவல்!

Mar 11, 2023,12:47 PM IST
சென்னை: எங்கிருக்கிறார்.. என்ன பண்ணுகிறார் என்றெல்லாம் தெரியாது.. ஆனால் என்னவெல்லாமோ பண்ணி தன்னை அடிக்கடி பேச வைத்து விடுகிறார் நித்தியானந்தா. இதோ இப்போது சீன அதிபராக மீண்டும் தேர்வாகியுள்ள ஜின் பிங்குக்கு வாழ்த்து கூறி அசர வைத்துள்ளார் நித்தியானந்தா.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் சாமியார் நித்தியானந்தா. கர்நாடகாவில் இவருக்கு ஆசிரமம் உள்ளது. இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு புகார்களில் சிக்கினார் நித்தியானந்தா. அவர் மீது கர்நாடக போலீஸ் வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து தலைமறைவானார் நித்தியானந்தா. அவரை தனிப்படை போலீஸார் கைது செய்து கர்நாடகம் கொண்டு வந்தனர்.

பின்னர் ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்தார் நித்தியானந்தா. வந்தவர் மீண்டும் சர்ச்சைகளில் சிக்கினார். மதுரை ஆதீனத்தை கைப்பற்ற முயற்சிப்பதாக பெரும் சர்ச்சை வெடித்தது. இந்த நிலையில் திடீரென நித்தியானந்தா தலைமறைவாகி விட்டார். கொரோனா அலை பரவலுக்கு முன்பே அவர் தலைமறைவாகி விட்டார்.



அந்த சமயத்தில்தான் அவர் கைலாசா என்ற நாட்டை உருவாக்கியிருப்பதாக ஒரு புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சமீப காலமாக கைலாசா சார்பாக பல்வேறு சமூக வலைதளப் பதிவுகள் வெளியாகி கலகலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகின்றன. பல்வேறு நாட்டுத் தலைவர்களைச் சந்திப்பது போலவும், ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்றது போலவும் அவர்கள் போட்டோ போட பரபரப்பு கூடியது. 

இந்த நிலையில் தற்போது சீன அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜின்பிங்குக்கு வாழ்த்து கூறியுள்ளார் நித்தியானந்தா. இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில்,  ஐக்கிய தேச கைலாசா சார்பிலும், இந்து மதத்தின் தலைமை பீடாதிபதி நித்தியானந்தா பரமசிவம் சார்பிலும், சீனக் குடியரசின் அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜி ஜின்பிங்குக்கு எங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வெற்றிகரமான அதிபராக சிறப்பாக செயல்பட எங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.  சீன நாட்டுக்கும், கைலாசாவுக்கும் இடையே நல்லுறவு தழைத்தோங்கவும் விரும்புகிறோம்.

சீன மக்களுக்கு பரமசிவத்தின் ஆசிர்வாதிங்கள் உண்டு. சீன மக்கள் மகிழ்ச்சியோடும், நலத்தோடும், வளத்தோடும், அமைதியோடும், பொருளாதார செழிப்போடும் வாழ வாழ்த்துகிறோம் என்று கூறியுள்ளார் நித்தியானந்தா.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்