என்னாது ரஞ்சிதா பிரதமரா.. கடுப்பான சிஷ்யைகள்.. சிக்கலில் நித்தியானந்தா!

Oct 06, 2023,04:03 PM IST

சென்னை: நடிகையாக இருந்து, பின்னர் நித்தியனந்தாவுடன் இணைந்து சர்ச்சையிலும் சிக்கி இப்போது அவரது பிரதம சிஷ்யையாக வலம் வரும் ரஞ்சிதாவை கைலாசா நாட்டின் பிரதமராக நித்தியானந்தா நியமிக்க திட்டமிட்டுள்ளதாக வெளியியான செய்திகளின் தொடர்ச்சியாக, நித்தியானந்தா சிஷ்யைகள், ரஞ்சிதாவுக்கு எதிராக பொங்கி எழுந்திருப்பதாக ஒரு புதுத் தகவல் வெளியாகியுள்ளது.


சேர்ந்தே இருப்பது எது.. நித்தியானந்தாவும், ரஞ்சிதாவும் என்று சொல்லும் அளவுக்கு நித்தியானந்தாவுடன் தொடர்ந்து இணைந்தே இருக்கிறார் ரஞ்சிதா. நாட்டை விட்டு வெளியேறி கைலாசா என்ற புதிய நாட்டை உருவாக்கியதாக நித்தியானந்தா அறிவித்தபோது அவருடன் ரஞ்சிதா இல்லை. இதனால் அவர் என்ன  ஆனார் எங்கிருக்கிறார் என்பது தெரியாமல் குழப்பமாக இருந்தது.




ஆனால் ரஞ்சிதாவும் கூட கைலாசாவில்தான் வாசம் செய்கிறார். அங்கிருந்தபடிதான் அவரும் செயல்படுகிறார். இந்த நிலையில்தான் தற்போது ரஞ்சிதாவை மையப்படுத்தி சலசலப்புகள் கிளம்பியுள்ளன.


சாமியார்கள் என்றாலே முற்றும் துறந்தவர்கள் என்றுதான் கூறுவார்கள். அப்படி இருக்க சாமியர்களிலும் சொகுசு வாழ்க்கை வாழும் சாமியார் யார் என்றால் அவர் தான் நித்தியானந்தா என்ற அளவிற்கு பேமஸ் ஆனவர். நித்தியானந்தா மீது பல புகார்கள் உள்ளன. பலியல் குற்றங்கள், ஆட்கடத்தல், நில அபகரிப்பு என பல்வேறு புகார்களுக்கு சொந்தகாரர்தான் இவர். பல்வேறு குற்றங்கள் இவர் மீது இருந்தாலும் இவருக்கு இருக்கும்  மவுசு மட்டும் குறைந்ததாக தெரியவில்லை. 


குற்றங்களில் இருந்து தப்பிக்க ஓடி ஓழிந்த நித்தியானந்தா, தென் அமெரிக்காவில் ஒரு தீவை விலைக்கு வாங்கியதாகவும், அந்த தீவிற்கு கைலாசா என பெயர் வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. கைலாசா சார்பில் உலகம் முழுவதிலும் தனிதனி பெண் சீடர்களை உருவாக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். 


இந்த நிலையில் ரஞ்சிதாவை கைலாசா நாட்டிற்கு பிரதமராக அறிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகின. இதற்கு நித்தியானந்தாவின் இதர பெண் சீடர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஞ்சிதாவிற்கும் கைலாசாவில் உள்ள சீடர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


ஆரம்பத்தில் நித்தியானந்தாவிற்கு பணிவிடை செய்ய வந்தவர் தான் ரஞ்சிதா. அவருக்குப் போய் பிரதமர் பதவியா என்பதுதான் பிற பெண் சீடர்களின் குமுறலாம். ரஞ்சிதாவையும் விட்டுக் கொடுக்க முடியாது.. பிற சிஷ்யைகளின் சேவையையும் விட்டு விட முடியாது என்பதால், நித்தியானந்தா என்ன முடிவெடுக்க உள்ளார் என்பது தெரியவில்லை

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்