சென்னை: சர்ச்சை சாமியாரும், கைலாசா என்ற நாட்டை உருவாக்கி அந்த நாட்டுக்கு தன்னை தலைவராக அறிவித்துக் கொண்டு சமூக வலைதளங்களில் வசித்து வருபவருமான நித்தியானந்தா சாமியார், அயோத்தி ராமர் கோவில் விழாவுக்கு தானும் வருவதாக கூறி டிவீட் போட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாலியல் புகாருக்குள்ளானவர் நித்தியானந்தா. இதுதவிர மேலும் பல வழக்குகளும் அவர் மீது உள்ளன. இந்த வழக்குகளில் சிக்கி கைதாகி, சிறைக்குப் போய் ஜாமீனில் வெளிவந்தவர் நித்தியானந்தா. தற்போது நாட்டை விட்டு தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.
கைலாசா என்ற நாட்டை தான் உருவாக்கியிருப்பதாக அதிரடியாக அறிவித்த அவர் அது முதல் டிவிட்டர், பேஸ்புக், யூடியூப் என சமூக வலைதளங்களிலேயே வாழ்ந்து வருகிறார். கைலாசா நாடு எங்கிருக்கு, எப்படி இருக்கு.. அதுல எத்தனை பேர் இருக்காங்க.. ரஞ்சிதாவும் அங்குதான் இருக்கிறாரா என்ற எந்த விவரமும் இதுவரை தெரியவில்லை.

அவ்வப்போது கைலாசா நாட்டுப் பிரதிநிதிகள் "இவரைச் சந்தித்தனர், அவரைச் சந்தித்தனர்" என்று ஏதாவது டிவீட் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இவர்களை நம்பி அமெரிக்காவில் ஒரு நகர நிர்வாகமே ஏமாந்து போன கதையும் கடந்த ஆண்டு நடந்தது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் புது டிவீட் போட்டு அனைவரையும் அதிர வைத்துள்ளார் நித்தியானந்தா. தன்னையும் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு அதிகாரப்பூர்வமாக அழைத்துள்ளதாகவும் தான் வரவுள்ளதாகவும் அவர் டிவீட்டில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் போடப்பட்டுள்ள டிவீட்டில், அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படவுள்ளது. இந்த அசாதாரணமான, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தருணத்தை யாரும் தவற விட்டு விடாதீர்கள். உலகம் முழுவதையும் கடவுள் ராமர் ஆசிர்வதிக்கப் போகிறார். நமது சுப்ரீம் தலைவர் நித்தியானந்த பரமசிவத்திற்கும் விழாவில் பங்கேற்க அதிகாரப்பூர்வ அழைப்பு வந்துள்ளது. இதை ஏற்று அவர் அங்கு செல்லவுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
அயோத்தி விழாவுக்கு நித்தியானந்தாவுக்கு உண்மையிலேயே அழைப்பு போயுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படியானால் நிஜமாகவே நித்தியானந்தாவும் வருவாரா என்ற எதிர்பார்ப்பும் கிளம்பியுள்ளது. அப்படி வருவதாக இருந்தால், நித்தியானந்தா தனது ஒரிஜினல் தோற்றத்தில் வருவாரா அல்லது மாறு வேடத்தில் வருவாரா என்ற விவாதம் தற்போது டிவிட்டரில் சூடாக வெடித்துள்ளது. அதேசமயம், பலர், அவர் சும்மா சொல்கிறார்.. நீங்க வேணும்னா பாருங்க யூடியூபில் லைவில் வந்து எல்லோரையும் ஏமாற்றப் போகிறார் என்று கூறி வருகின்றனர்.
நிஜமாகவே அயோத்திக்கு நித்தியானந்தா வருகிறாரா என்பது உண்மையிலேயே பரபரப்பாகத்தான் பேசப்படுகிறது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}