"இந்தியா" என்ற பெயர் வச்சே ஆகணுமா.. தயங்கிய நிதீஷ் குமார்!

Jul 19, 2023,11:32 AM IST

டெல்லி: எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என்ற பெயர் வைத்திருப்பதை  மிக மிக புத்திசாலித்தனமான முடிவு என்று பலரும் பாராட்டி வரும் நிலையில் சில தலைவர்கள் இந்தப் பெயர் கண்டிப்பா வச்சே ஆகணுமா என்று தயங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


பெங்களூரு எதிர்க்கட்சிகள் கூட்டம் நாடு முழுவதும் பேசு பொருளாகி விட்டது. தங்களது கூட்டணிக்கு I.N.D.I.A  என்று பெயர் வைத்து அசத்தி விட்டனர் எதிர்க்கட்சிகள். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த பெயர் வைப்பதற்கு முன்பு அனைத்துத் தலைவர்களிடமும் ஆலோசனை கேட்கப்பட்டது. அப்போது பெரும்பாலான தலைவர்கள் நல்லாருக்கு என்று பாராட்டியுள்ளனர். ஆனால் நிதீஷ் குமார் மட்டும் முதலில் தயக்கம் காட்டியுள்ளார்.


இந்தியா என்ற பெயரை எப்படி வைக்க முடியும், சரியாக இருக்காதே என்று கூறி சில கேள்விகளையும் எழுப்பியுள்ளார் நிதீஷ் குமார்.  மேலும் இந்த I.N.D.I.A என்ற பெயரில் பாஜக கூட்டணியின் 'NDA'என்ற பெயர் வருகிறதே என்றும் அவர் கேட்டுள்ளார்.


இடதுசாரி தலைவர்களும் கூட இந்தியா என்ற பெயருக்குத் தயக்கம் காட்டியுள்ளனர்.  அதேசமயம், பெரும்பாலான தலைவர்கள் இந்தியா என்ற பெயருக்கு சம்மதம் தெரிவித்ததால், நிதீஷ் குமாரும் கடைசியில் சரி என்று கூறி விட்டாராம். "உங்களுக்கு எல்லாம் இந்தப் பெயர் சரி என்று பட்டால், எனக்கும் ஆட்சேபனை இல்லை.. இதையே வச்சுக்குவோம்" என்று நிதீஷ் குமார் கூறி விட்டதாக சொல்கிறார்கள்.


இந்தப் பெயரை யார் வைத்தது என்பது இப்போது விவாதப் பொருளாகியுள்ளது. மமதா பானர்ஜிதான் இந்தப் பெயர் குறித்த யோசனையைத் தெரிவித்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார். ராகுல் காந்தியும் இதே பெயரை சொன்னதாகவும் தகவல்கள் கூறுகின்றன.


மேலும் ராகுல் காந்தி இந்தப் பெயரை முதலில் கூறி, அதை மமதாவிடம் ஆலோசனை செய்த பின்னர், மமதா பானர்ஜி அந்தப் பெயரை கூட்டத்தில் முன்மொழிந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்தியா என்ற பெயரை ஏன் தான் யோசித்தேன் என்பதையும் ராகுல் காந்தி கூட்டத்தில் விளக்கியதாகவும் சொல்கிறார்கள்.


இதற்கிடையே, இந்தியா என்ற பெயருக்கு மாற்றாக பாரத் என்ற பெயரை பாஜகவினர் பயன்படுத்த ஆரம்பித்துள்ளதால் அதற்கும் எதிர்க்கட்சிகள் பதிலடி கொடுத்து வருகின்றனர். Jeetega Bharat (இந்தியாவே வெல்லும்) என்ற டேக்லைனை அது இந்தியா என்ற கூட்டணியின் பெயருக்குக் கீழ் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. இந்த டேக்லைனை உத்தவ் தாக்கரே பரிந்துரைத்ததாக சொல்கிறார்கள். அது இந்தியிலேயே  இருக்கட்டும் என்றும் அவர் தான் யோசனை தெரிவித்தாராம். அப்போதுதான் இந்தி பெல்ட் மாநிலங்களில் கூட்டணிக்கு ஆதரவு கிடைக்கும் என்பது அவரது எண்ணமாம்.


அடுத்த "இந்தியா" கூட்டம் மும்பையில் நடைபெறவுள்ளது. உத்தவ் தாக்கரே இதை நடத்தப் போகிறார்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்