பாட்னா: பீகார் சட்ட மன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்ற நிதிஷ்குமார் 10வது முறையாக இன்று பதவியேற்றார்.
பீகாரில் நவம்பர் 6 மற்றும் 11ம் தேதியில் இரண்டுகட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் நிதிஷ்குமார் தலைமையிலான என்டிஏ கூட்டணி 243 சட்டமன்ற தொகுதிகளில் 202 தொகுதிகள் பெற்று அமோக வெற்றி பெற்றது. பாஜக 89, ஜேடியு 85 தொகுதிகளையும் கைப்பற்றியது. தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெறவில்லை என்பதால் நிதிஷ்குமார் தலைமையில், ஆட்சி அமைக்கிறது.

நேற்று நடைபெற்ற கூட்டத்தில் நிதிஷ்குமார் என்டிஏ கூட்டணி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து இன்று நிதிஷ்குமார் பீகார் முதலமைச்சராக பதவியேற்றார். இந்த பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் பாட்னா காந்தி மைதானத்தில் பிரமாண்ட அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. காலை 11.30 மணிக்கு நிதிஷ்குமார் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
முதலமைச்சராக நிதிஷ்குமார் தேர்வாகியிருக்கும் நிலையில், பாஜக பேரவை குழு தலைவராக தாராப்பூர் தொகுதி எம்எல்ஏ சாம்ராட் சௌத்ரியும், துணை தலைவராக லக்கிசராய் தொகுதி எம்எல்ஏவுமான விஜய்குமார் சின்ஹாவும் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். கடந்த ஆட்சியில் இவர்கள் இருவரும் துணை முதல்வராக பொறுப்பு வகித்திருந்தனர். இந்த முறையும் இவர்களுக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நிதிஷ்குமார் பதவியேற்கும்போது இருவரும் துணை முதல்வர்களாக பதவியேற்றார்கள்.
ஜனநாயகன் வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றத்தையே அணுக உச்சநீதிமன்றம் உத்தரவு
பொங்கல் மட்டுமல்ல இன்று.. இன்னொரு நாளும் இன்று கொண்டாடப்படுகிறது.. அது என்ன?
இந்தியாவை எஃகு கோட்டையாக்கி .. எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம் ஆகி!
வழிந்தோடும் பொங்கலுடன் இணையும் அனைத்து நற்பலன்கள்!
பொங்கலோ பொங்கல் என்றுரத்துக் கூவிட.. கிண்டிடக் கிண்டிடக்.. குலவையிட்டு!
மங்கலத் தை மலர்ந்த நாள் பொங்கல் வைத்து எங்கும் இன்பம்!
தை மாதம் பிறந்தது பொங்கலோ பொங்கல் .. பொங்கலோ பொங்கல் !
வைகைத் துயில் கலைந்து வாசலில் போட்ட கோலங்கள்!
வருக வருக.. தை மகளே வருக..!
{{comments.comment}}