டெல்லி : உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதல்வரின் பெயரை பயன்படுத்த தடையில்லை என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதோடு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு இடைக்கால தடை விதித்தும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
"உங்களுடன் ஸ்டாலின்" என்ற பெயரில் சமீபத்தில் தமிழக அரசு நலத்திட்டம் ஒன்றை துவங்கியது. இதையடுத்து இதை எதிர்த்து, அரசு பணத்தில் கட்சிக்கு விளம்பரம் தேடுகிறார்கள். அதனால் அரசு திட்டத்திற்கு முதல்வரின் பெயரை வைக்க தடை விதிக்க வேண்டும் என உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை எதிர்த்து முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம், சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், அரசு திட்டங்களில் வாழும் அரசியல் தலைவரின் பெயரையோ, மறைந்த தலைவர்களின் புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டது. மேலும் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கும் இடைக்கால தடை விதித்தது.

சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்திருந்தும் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் அரசு விழாவாக நடத்தப்பட்டு, முதல்வரே துவக்கி வைத்துள்ளார். கோர்ட்டின் தடை உத்தரவை அமல்படுத்த தவறிய சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கும் சி.வி.சண்முகம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சி.வி.சண்முகம் தரப்பு மனுவில் கேட்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு சென்னை ஐகோர்ட் விதித்த தடையை எதிர்த்து திமுக சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதல்வரின் பெயரை பயன்படுத்த தடையில்லை. மனுதாரர் ஒரு குறிப்பிட்ட கட்சியை மட்டும் எதிர்த்து இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார் என்பது தெரிகிறது. பொதுவாக அனைத்து கட்சிகளும் இது போல் பயன்படுத்தக் கூடாது என கேட்டிருக்கலாம். ஆனால் இது உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட மனுவாகும். உங்களின் அரசியல் சண்டைகளை கோர்ட்டிற்கு கொண்டு வராதீர்கள் என கண்டிப்புடன் தெரிவித்தது.
மேலும் அரசியல் உள்நோக்கத்துடன் அரசின் திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தும் சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சத்தம் ஏதுமின்றி... மௌனமாய் விழிகளில்!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
விநாயகப் பெருமானை வழிபட்டு.. தடைகள் நீங்கி வெற்றி பெற.. வர சதுர்த்தி!
ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் இன்று சற்று குறைந்தது... இதோ இன்றைய விலை நிலவரம்!
மக்கள் ஆதரவை இழந்து விட்டது திமுக.. அடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிதான் - பாஜக
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
ஜனவரி 25 விஜய் தலைமையில் தவெக செயல் வீரர்கள் கூட்டம்
கனவும் அலட்சியமும் – கல்வி வளாகத்தின் கதை!
உறவைத் தேடி..!
{{comments.comment}}