அதிமுகவை எதிர்க்க எந்தக் கொம்பனாலும் முடியாது.. மதுரையில் எடப்பாடி பழனிச்சாமி முழக்கம்!

Aug 20, 2023,07:04 PM IST
மதுரை:  அதிமுக தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய கட்சி. 31 ஆண்டு காலம் ஆட்சி செய்த கட்சி. அந்தக் கட்சியை எதிர்க்க எந்தக் கொம்பனாலும், எந்தக் கட்சியாலும் முடியாது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் நிறைவுரையாற்றினார் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது அவர் பேசியதிலிருந்து சில பகுதிகள்:



எனக்கு புரட்சித் தமிழர் பட்டம் சூட்டிய சமயப் பெரியவர்களுக்கு நன்றி. தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய கட்சி அதிமுகதான். 51 ஆண்டுகளில் 31 ஆண்டுகாலம் ஆட்சி செய்த மிகப் பெரிய கட்சி அதிமுகதான். இந்த ஆட்சியில்தான் தமிழகம் உயர்வு பெற்றது. கடைக்கோடி சாமானியர்களுக்குக் கூட நன்மை கிடைத்தது. அனைத்துத் துறைகளிலும் முதன்மை இடத்தைப் பெற்றது. 

இப்படிப்பட்ட அதிமுகவை எதிர்க்க எந்தக் கொம்பனாலும் முடியாது. எந்தக் கட்சியாலும் முடியாது. அதிமுக தொண்டன் உழைப்பால் உயர்ந்தவன். எந்துப் பிரதிபலனும் பார்க்காமல் சொந்த வேலைகளையும் விட்டு விட்டு கழகமே பெரிது மீண்டும் ஆட்சியில் அமர்த்துவோம் என்று சபதம் எடுத்து செயல்படுபவர்கள். இதுதான் அதிமுக.

கட்சி தொடங்கிய பிறகு நடந்த முதல் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் இணைந்திருந்த திண்டுக்கல் லோக்சபா தேர்தலை எம்ஜிஆர் சந்திதத்தார். அதில்,எம்ஜிஆர் ஆசி பெற்ற வேட்பாளர் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று சாதனை படைத்தார். கட்சி தொடங்கி 6 மாதத்திலேயே தேர்தலில் போட்டியிட்டு வென்ற முதல் கட்சி அதிமுகதான். எம்ஜிஆர் முகத்தைப் பார்த்தாலே போதும் தானாக வாக்குகள் கிடைக்கும். மக்கள் சக்தி பெற்ற தலைவர் தோற்றுவித்த இயக்கம்தான் அதிமுக.



தமிழகத்தில் எத்தனையோ கட்சிகள் உள்ளன. ஆனால் நாட்டு மக்களுக்கு நன்மை செய்கிற இயக்கம் அதிமுகதான். அதிமுக அழியும் என்று கருணாநிதி கனவு கண்டார். முடியவில்லை. ஜெயலலிதா நான் இருக்கிறேன் என்று தமிழக மக்களுக்கு அடையாளம் காட்டப்பட்டவர் அவர். இயக்கத்தை ஒன்றாக இணைத்து மீண்டும் எம்ஜிஆர் ஆட்சியை கொண்டு வந்தார்.

1989ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவன் நான். லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றேன். சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றேன், அமைச்சராகி உங்களுடைய ஆதரவால் தமிழகத்தின் முதல்வராக இருந்தேன். இன்றைய முதல்வர் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர், எனது அரசு மீது பல்வேறு விமர்சனங்களை வெளிப்படுத்தினார்.  ஏளனம் கேலி செய்தார். உங்களுடைய ஆதரவால் நான்கு வருடம் 2 மாத காலம் சிறப்பானஆட்சியைக் கொடுத்தோம். 



நான் ஆட்சிப் பொறுப்பேற்றபோது கடுமையான வறட்சி. குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்கவில்லை. சென்னை நகருக்கு ரயில் மூலமாக தண்ணீர் கொண்டு வந்தோம்.  அதெல்லாம் மிகப் பெரிய சாதனை. கஜா புயல் வந்தபோது புயலை விட வேகமாக செயல்பட்டு அதன் அடிச்சுவடு கூட இல்லாமல் செயல்படுத்திய அரசு எனது தலைமையிலான அதிமுக அரசு. புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பாசன விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையை அள்ளி அள்ளிக��� கொடுத்தோம். 

மக்களைக் காத்த அரசு அதிமுக அரசு. மக்கள் அதைப் பாராட்டினார்கள். அதன் பிறகு கொரோனா வந்தது. உலகமே அச்சத்தில் இருந்தது. அப்படிப்பட்ட கொரோனாவை அதிமுக அரசு மிகச் சிறப்பாக கையாண்டு அறவே அகற்றிய அரசு அதிமுகஅரசு. கொரோனா காலத்தில் ரேஷன் கடைகள் மூலம் 11 மாத காலத்திற்கு விலையில்லா அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களைக் கொடுத்த அரசு அதிமுக அரசு. குடும்பத்துக்கு 1000 ரூபாய் கொடுத்தோம். மதுரையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருந்ததால் மீண்டும் ஒருமுறை 1000 ரூபாய் கொடுத்தோம். 



தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய அரசு அதிமுக அரசுதான். ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் பல திட்டங்களைக் கொண்டு வந்தோம். அதிமுகவின்ன் 10 ஆண்டு கால ஆட்சியில் 50 ஆண்டு கால முன்னேற்றத்தைப் பாரத்தோம். 2 வருட கால விடியா திமுகஆட்சியில் 20 ஆண்டுகள் பின்னோக்கிப் போயுள்ளோம். காவிரிப் பிரச்சினையை ஜெயலலிதா சட்டப் போராட்டம் நடத்தி தீர்த்தார். 50 ஆண்டு காலப் போராட்டத்தை உச்சநீதிமன்றம் மூலமாக தீர்ப்பைப் பெற்ற அரசு அதிமுக அரசு.

விவசாயிகளைக் காத்த அரசு அதிமுக அரசு. நானே ஒரு விவசாயி. ஆனால் காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்க ஒப்பந்தம் போட்டு அதை அழிக்க முயற்சித்தது ஸ்டாலின் தலைமையிலான திமுக. முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை 142 அடியாக உயர்த்த ஜெயலலிதா தலைமையிலான அரசுதான் உச்சநீதிமன்றத் தீர்ப்பைப் பெற்றுக் கொடுத்தது. அதையும் காத்தது அதிமுக அரசுதான். விவசாயிகளுக்கு நிறையத் திட்டங்களை அளித்த அரசு அதிமுக அரசுதான். விவசாயிகளின் பயிர்க்கடனை 2 முறை ரத்து செய்த அரசு அதிமுக அரசு.

சமீபத்திய செய்திகள்

news

Tatkal ticket Booking: கடைசி நிமிட டிக்கெட்டுக்கு இனி 'ஒற்றை சாவி' - ஓ.டி.பி கட்டாயம்

news

Bow bow.. செல்லப் பிராணிகளின் உரிமம் பெற.. காலக்கெடு டிச. 14 வரை நீட்டிப்பு!

news

பாஜக காலுன்ற முடியாத மாநிலம் தமிழகம்..மத்திய அரசு வஞ்சிக்கிற போக்கை கடைபிடிக்குறது: செல்வப்பெருந்தகை

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்