சென்னை: தமிழ்நாடு முழுவதும் வடகிழக்குப் பருவ மழை களை கட்டியுள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. சென்னையிலும் கூட விட்டு விட்டு லேசான மழை பெய்துள்ளது.
2025ம் ஆண்டின் வட கிழக்குப் பருவ மழை சீசன் நேற்று தொடங்கியதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அடுத்து காற்றழுத்தத் தாழ்வும் உருவாகவுள்ளது. இதனால் வரும் நாட்கள் மழை பெறும் நாட்களாக அமையப் போகிறது. இதைக் கொண்டாடவும், அதை வரவேற்கவும், கூடவே முன்னெச்சரிக்கையுடனும் மக்கள் தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில் மழை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ஒரு அப்டேட் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

மாநிலம் முழுவதும் பரவலான மழை மற்றும் KTCC (சென்னை) யிலும் நல்ல மழை. சென்னையில் OMR மற்றும் ECR பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. மாஞ்சோலையில் உள்ள நாலுமுக்கு 163 மிமீ மழையுடன் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. குமரி கடலில் இருந்து அரபிக்கடலுக்கு ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அல்லது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி (UAC) நகரும்போதெல்லாம், மாஞ்சோலை மலைகளில் மழையைத் தடுக்க முடியாது.
இன்று சென்னை மற்றும் அதையொட்டியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பகல் நேரத்தில் இடைவெளிகளுடன் சில மழைப்பொழிவுகள் இருக்கும், பின்னர் வழக்கம் போல் இரவு முதல் காலை வரை மழை அதிகரிக்கும்.
தென் தமிழகத்தைப் பொறுத்தவரை - சிவகங்கை, இராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி போன்ற தென் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு மழைக்கு மிகச் சிறந்த நாளாக இருக்கும். குறிப்பாக நாலுமுக்கு மற்றும் ஊத்து போன்ற மாஞ்சோலைப் பகுதிகளில் நாளையும் கூட மழை தொடரும், அதிகமாகவும் இருக்கும்.
மேற்கு தமிழகத்தைப் பொறுத்தவரை திண்டுக்கல், கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்கள் மழைக்கு உகந்த நிலையில் உள்ளன. குன்னூரில் அதிக அளவுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது.
டெல்டா - நாகை, தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்கள் அனைத்தும் நல்ல மழையைப் பெறும்.
நெல்லை மாவட்டம் மாஞ்சோலையில் இன்று பல பகுதிகளில் மிக கன மழையை எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
சென்னையைப் பொறுத்தவரை இரவில் விட்டு விட்டு லேசான மழை பெய்துள்ளது. காலையிலிருந்து வானம் மேக மூட்டமாக இருக்கிறது. நேற்று போலவே இன்றும் மாலையில் மழையை எதிர்பார்க்கலாம். இருப்பினும் பகலிலும் கூட கையில் குடையுடன் செல்வதே சாலச் சிறந்தது.
லட்சியக் கனவை முன்னின்று நிறைவேற்றப் போவது நீங்கதான்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்து
அதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.. நீங்க யாரும் ஹர்ட் ஆகாதீங்க.. தவெக தலைவர் விஜய்
கோவையை அதிர வைத்த.. மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. 3 பேருக்கும் சாகும் வரை ஆயுள்!
தமிழக சட்டசபை தேர்தல் 2026 விஐபி தொகுதிகள்...எந்த தொகுதியில் யார் போட்டியிட வாய்ப்பு?
இந்தியா உதவியது ஏன்?... வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்
கேஸ் சிலிண்டர் விலை உயர்விற்கு திமுக தான் காரணம்...அண்ணாமலை சொன்ன காரணம்
ஈரான் போர் எப்பதான் முடியும்.. ஏன் இந்த சண்டை.. அடுத்து என்னதான் நடக்கும்?
வீட்டு உபயோகத்திற்கான சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.60 உயர்வு
ஓம்பிர்லாவை சபாநாயகர் பதவியிலிருந்து நீக்க தீர்மானம்: மார்ச் 9 அன்று லோக்சபாவில் முக்கிய நகர்வு
{{comments.comment}}