சென்னை: சென்னை மக்களே சென்னைக்கு அருகே இருக்கும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட மக்களே.. உங்களுக்கெல்லாம் 23ம் தேதி முதல் 30ம் தேதி வரை சூப்பரான மழை காத்திருக்காம். தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதோ கிட்ட வந்து விட்டது வட கிழக்குப் பருவ மழை. அதிகாரப்பூர்வமான அறிவிப்புக்காக மட்டுமே அனைவரும் வெயிட்டிங். மத்தபடி வெயிட்டாக வெளுத்து வாங்க ஆரம்பித்து விட்டது மழை. தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மழை ஜோராக தொடங்கி விட்டது.
இந்த சீசனின் முதல் பலத்த மழையை நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் பெற்றுள்ளன. அங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் அளவுக்கு மழை பெய்துள்ளது.

வழக்கமாக வட கிழக்குப் பருவ மழைக்காலத்தில் ஏகப்பட்ட பஞ்சாயத்துக்களை சந்திப்பது நம்ம தலைநகரம் சென்னை தான். தண்ணீரில் மிதக்கும் சென்னை, வெள்ளத்தில் மூழ்கிய வேளச்சேரி, மிதக்கும் மடிப்பாக்கம் என்றெல்லாம் செய்திகளில் அடிபடுவது சென்னைக்கு சகஜமாகி விட்டது. இதனால் மழை வந்தாலே சென்னைக்கு என்னப்பா நிலவரம் என்று கலவரமாக கேட்பது வழக்கமாகி விட்டது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் காலையிலிருந்து லேசான வெயில் அடித்து வருகிறது. அதேசமயம், மாலை அல்லது இரவில் சூப்பரான மழை இருக்குமாம். இருப்பினும் சென்னை மற்றும் அதையொட்டியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 23ம் தேதி முதல் 30ம் தேதி காலக்கட்டத்தில்தான் நல்ல மழைப் பொழிவுக்கு வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அந்த சமயத்தில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு உருவாகவும் வாய்ப்பிருக்கலாம்.
இவர் சொல்வதைப் பார்த்தால் தீபாவளிக்கு சென்னைவாசிகள் சற்று நிம்மதியாக பட்டாசு வாங்கி வெடிக்கலாம் என்று எதிர்பார்க்கலாம்.. இருந்தாலும் குடையோட கடைக்குப் போங்க.. அவ்வப்போது திடீர் திடீர் மழைக்கு வாய்ப்பிருக்காம்.
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}