சென்னை: வட கிழக்குப் பருவ மழை சிறப்பான தொடக்கத்துடன் ஆரம்பிக்கும் சூழல் அருமையாக உருவாகியிருக்கிறது. இன்று அல்லது நாளை பருவ மழை தொடங்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று முதலே சிறப்பான மழையை கடலோர தமிழ்நாடு பெற ஆரம்பித்திருக்கிறது. அதிலும் கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் அனைத்து கடலோர மாவட்டங்களிலுமே பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. சென்னையில் இரவு முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது. காலையிலும் கூட மழை தொடர்ந்தது.

வட சென்னையில் 100 மில்லி மீட்டர் அளவுக்கு மழை கொட்டித் தீர்த்துள்ளது. அனைத்து கடலோர மாவட்டங்களிலும் நல்ல மழை காணப்படுவதால் வட கிழக்குப் பருவ மழை இன்று அல்லது நாளை தொடங்கக் கூடும். இந்திய வானிலை மையம் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும்.
கடலோர மாவட்டங்களில் தற்போது மேகக் கூட்டம் கலைந்து காணப்படுவதால் மழை சற்று மட்டுப்படும் என்றும் உட்புற மாவட்டங்களில் மழை இருக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
இன்று காலை 9.30 மணி நிலவரப்படி கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது.
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
திருக்கடையூரில் பிறந்த குங்கிலியக் கலய நாயனார்.. 63 நாயன்மார்கள் வரலாறு!
Tamil Nadu Assembly elections: படு விறுவிறுப்பான வாக்குப் பதிவு.. அதிர வைக்கும் 1 மணி நிலவரம்!
நட்பு.. என்றும் நிலைத்து இருக்கும் வானம்!
எங்க ஊரு பாட்டு!
புத்தகம்.. அறிவு, ஒழுக்கம், சிந்தனை, கற்பனையை வளர்க்கும் சிறந்த கருவி!
{{comments.comment}}