சென்னை: தமிழ்நாட்டில் 15 அல்லது 16ம் தேதி வாக்கில் வட கிழக்குப் பருவ மழை தொடங்கலாம் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் வருகிற 16ம் தேதி சென்னை உள்ளிட்ட நான்கு வட மாவட்டங்களுக்கு அதி கன மழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வட கிழக்குப் பருவ மழை தொடங்குவதற்கான சாதகமான சூழல்கள் வலுத்து வருகின்றன. நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் கன மழை பெய்வதற்கான சூழலும் உருவாகியுள்ளது. இந்த நிலையில் சென்னை வானிலை மையம் இன்று சில முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
வட கிழக்குப் பருவ மழை
அடுத்த நான்கு நாட்களில் தென் மேற்குப் பருவ மழை முற்றிலுமாக விலகி விடும். இதைத் தொடர்ந்து அக்டோபர் 15 -16ம் தேதி வாக்கில் வட கிழக்குப் பருவ மழை தமிழ்நாடு உள்ளிட்ட தென் இந்திய மாநிலங்களில் தொடங்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
கன மழை எச்சரிக்கை
இதுதவிர தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு கன மழை முன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அந்த விவரம்.
13ம் தேதி - தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்பு. தர்மபுரி, சேலம், நீலகிரி, ஈரோடு, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், திருப்பூர், கோவை, திண்டுக்கல், புதுக்கோட்டை, நாகப்பட்டனம், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக் கூடும்.
14ம் தேதி - விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டனம் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் கன முதல் மிக கன மழைக்கான வாய்ப்பு. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக் கூடும்.
15ம் தேதி - சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரியில் கன முதல் மிக கன மழைக்கான வாய்ப்பு. வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டனம், மயிலாடுதுறை மாவட்டங்கள், காரைக்காலில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு.
சென்னைக்கு அதி கன மழை எச்சரிக்கை
16ம் தேதி - சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதி கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரியில் கன முதல் மிக கன மழை பெய்யக் கூடிய வாய்ப்புள்ளது. அதேபோல வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக் கூடிய வாய்ப்புள்ளது. 16ம்தேதி தமிழ்நாட்டில் மிகப் பெரிய அளவிலான மழையாக இது இருக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் முன்னெச்செரிக்கையாக இருக்க வேண்டும்.
17ம் தேதி - திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கன முதல் மிக கன மழைக்கான வாய்ப்புள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், ஈரோடு மாவட்டங்களில் கன மழைக்கான வாய்ப்பும் உள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில், 18ம் தேதி முதல் மழை அளவு லேசானது முதல் மிதமான என்ற அளவுக்குத் திரும்பும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}