சென்னை: தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை விலகி விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இந்த வடகிழக்கு பருவமழை நாளுக்கு நாள் தீவிரமடைந்து தமிழகத்திற்கு நிறைய மழைகளை கொடுத்தது. கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் வட கிழக்குப் பருவ மழையால் அதீதமான மழையைப் பெற்றது இந்த சீசன்தான்.
வங்க கடலில் அடுத்தடுத்து உருவான காற்று சுழற்சி காரணமாக கடலோர பகுதிகளில் மட்டுமல்லாமல் தென் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்தது. அதாவது கடந்த ஆண்டில் தமிழ்நாட்டில் டாணா, ரிமால், ஃபெங்கல் என மூன்று புயல்கள் உருவானது. இதில் வடகிழக்கு பருவமழை காலகட்டத்தில் மட்டும் டானா மற்றும் ஃபெங்கல் புயல் உருவாகி இருந்தது. இதில் டானா புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த புயல் தமிழ்நாட்டை விட்டு விலகி ஓடிசா மற்றும் மேற்கு வங்காளம் இடையே கரையை கடந்தது.
ஆனால் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் உருவான ஃபெங்கல் புயல் தமிழ்நாட்டின் கடலோரம், வடக்கு உள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக கனமழை முதல் மிக கனமழை வரை கொட்டி தீர்த்தது.
இதனால் வீடுகளில் தண்ணீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைகள் துண்டிக்கும் அளவிற்கு மழை நீர் ஆற்று வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடியது. மக்கள் செய்வதறியாமல் புலம்பி தவித்து வந்தனர். இதனை தொடர்ந்து இப்பகுதிகளில் உள்ள மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
விழுப்புரம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் பெய்த வரலாறு காணாத மழையால் அப்பகுதிகள் முழுவதும் மழைநீரில் தத்தளித்தது. இதனால் முக்கிய ஆறுகளும் அணைகளும் நிரம்பி தண்ணீர் நகர் முழுவதும் ஆக்கிரமித்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலைமை ஏற்பட்டது. அதே சமயத்தில் விளை நிலங்கள் அனைத்தும் பாழாகின. அறுவடை செய்யும் நிலையிலுள்ள பயிர்கள் நீரில் மூழ்கி அழுகின.
திருவண்ணாமலையில் பெய்த கனமழையின் எதிரொலியால், நிலச்சரிவு ஏற்பட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்த பெங்கல் புயலின் தாக்கம் தமிழ்நாடு மட்டுமல்லாமல் புதுச்சேரி காரைக்கால் கடலோரப் பகுதிகளில் உள்ள கிராமங்கள் முழுவதும் நீரில் மூழ்கி கடும் சேதத்தை சந்தித்தது. மக்கள் உடைமைகளை இழந்து தவிப்பிற்கு உள்ளாகினர்.
இந்த வட கிழக்கு பருவ மழைக்காலத்தில் அதிக அளவிலான பாதிப்பை சந்தித்தது பெங்கல் புயல் சமயத்தில்தான். நவம்பர் 22ஆம் தேதி உருவாகி, டிசம்பர் ஒன்றாம் தேதி வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இடையே கரையை கடந்தாலும் கூட தொடர்ந்து தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கன மழை பெய்து கொண்டே இருந்தது.
பின்னர் மழையின் தீவிரம் படிப்படியாக குறைந்து பனிப்பொழிவு தொடங்கியது. இருப்பினும் இலங்கை தெற்கே உருவான வளிமண்டல சுழற்சி காரணமாக ஜனவரி 11 பதினோராம் தேதி முதல் 17ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்து வந்தது. அதே சமயத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வந்தது.
இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 15ஆம் தேதி தொடங்கி 100 நாட்கள் பெய்துள்ள நிலையில் வடகிழக்கு பருவமழை முற்றிலும் விலகியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டு இயல்பை விட 33 சதவிகிதம் அதிகமாக பெய்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
பருவ மழை விலகி விட்டாலும் கூட, 29.1.2025-ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
30.1.2025 கன மழை:
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மிதமான மழை:
தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளது.
31.1.2025 கனமழை:
கோவை, நீலகிரி, மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மிதமான மழை:
தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தீபாவளி ஸ்வீட்ஸ் மட்டும் போதுமா.. சூடான மொறுமொறு ஓமம் பக்கோடா செய்யலாமா!
தீபாவளி என்ற பெயர் வந்தது எப்படி.. பாதுகாப்பாக எப்படிக் கொண்டாடலாம்?
தீபாவளி தீபாவளி.. சூப்பரா காஜு கத்திலி செய்வோம்.. ஸ்வீட்டா பண்டிகையை கொண்டாடுவோம்
விடிஞ்சா தீபாவளி.. அலை அலையாக சொந்த ஊர்களில் குவிந்த மக்கள்.. வெறிச்சோடியது சென்னை
ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்... சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்
ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார், ஏரி, டிவி விற்பனை அதிகரிப்பு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
கரூர் துயரம் எதிரொலி.. தீபாவளி கொண்டாட வேண்டாம்.. தொண்டர்களுக்கு தவெக வேண்டுகோள்
எனது பெயரில் நற்பணி மன்றம் தொடங்க வேண்டாம்.. விட்ருங்க.. அண்ணாமலை கோரிக்கை
{{comments.comment}}