மும்பை: புகழ் பெற்ற கஜல் பாடகர் பங்கஜ் உதாஸ் காலமானார். அவருக்கு வயது 72.
இந்தியாவின் புகழ் பெற்ற பாடகர்களில் பங்கஜ் உதாஸுக்கு தனி இடம் உண்டு. நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பங்கஜ் உதாஸ் இன்று மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
சில நாட்களாகவே உதாஸின் உடல் நிலை மோசமடைந்து வந்துள்ளது. அவரை ப்ரீச்கண்டி மருத்துவமனையில் குடும்பத்தினர் சேர்த்திருந்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காத நிலையில் பங்கஜ் உதாஸ் காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் நாளை மும்பையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் கஜல் துறையில் முக்கியமான பிரமுகர் பங்கஜ் உதாஸ். கடந்த 40 வருடங்களாக அவர் கஜல் உலகை வசீகரித்து வந்தார். 1951ம் ஆண்டு மே 17ம் தேதி குஜராத் மாநிலம் ஜெட்பூரில் பிறந்தவர் உதாஸ். இளம் வயதிலேயே அவர் இசைத் துறைக்கு வந்து விட்டார்.
அவரது அண்ணன் மன்ஹால் உதாஸ் ஒரு பின்னணிப் பாடகராக இருந்தவர். அவர் மூலம் இசையில் நாட்டம் பெற்ற பங்கஜ் உதாஸ் கஜல் பாடகராகவும், பின்னணிப் பாடகராகவும் வலம் வந்தார்.
Bow bow.. செல்லப் பிராணிகளின் உரிமம் பெற.. காலக்கெடு டிச. 14 வரை நீட்டிப்பு!
பாஜக காலுன்ற முடியாத மாநிலம் தமிழகம்..மத்திய அரசு வஞ்சிக்கிற போக்கை கடைபிடிக்குறது: செல்வப்பெருந்தகை
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
{{comments.comment}}