மதுரை: பிரபல தமிழ் எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜன் மதுரையில் இன்று காலமானார். அவருக்கு வயது 65.
மதுரை டிவிஎஸ் நகரில் உள்ள அவரது வீட்டில் இன்று பாத்ரூமில் கால் வழுக்கி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார் இந்திரா செளந்தரராஜன் என்று தகவல்கள் கூறுகின்றன.
தமிழ் இலக்கிய உலகில் முக்கியமானவர் இந்திரா செளந்தரராஜன். சிறுகதைகள், தொடர் கதைகள், நாவல்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்களிலும் முக்கியப் பங்காற்றியுள்ளார் எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜன்.

எங்கே என் கண்ணன், நாக பஞ்சமி, நீலக்கல் மோதிரம், கோட்டைப்புரத்து வீடு, காற்றாய் வருவேன், விடாது கருப்பு, ருத்ர வீணை, தேடாதே தொலைந்து போவாய் என இவரது சிறந்த கதைகளை மிகப் பெரிய பட்டியல் இடலாம். என் பெயர் ரங்கநாயகி, சிவமயம், ருத்ரவீணை, விடாது கருப்பு, மர்மதேசம் என இவரது படைப்புகள் பல தொலைக்காட்சித் தொடர்களாகவும் வெளியாகி புகழ் பெற்றுள்ளன.
பக்தி இலக்கியத்திற்கும் இந்திரா செளந்தரராஜன் மிக முக்கியப் பங்காற்றியுள்ளார். குறிப்பாக வைணவ மத நூல்களைப் படித்துத் தேறியவர். அதில் உள்ள பல்வேறு விஷயங்களை சாமானிய மக்களுக்கும் புரியும் வகையில் எழுதியவர் இந்திரா செளந்தரராஜன்.
இந்திரா செளந்தரராஜனின் மறைவுக்கு பல்வேறு எழுத்தாளர்கள், தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
மக்கள் ஆதரவை இழந்து விட்டது திமுக.. அடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிதான் - பாஜக
நிலையாமை!
ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் இன்று சற்று குறைந்தது... இதோ இன்றைய விலை நிலவரம்!
எங்கே என் .. யாதுமானவன்?
விநாயகப் பெருமானை வழிபட்டு.. தடைகள் நீங்கி வெற்றி பெற.. வர சதுர்த்தி!
தை மாதத்தில் வசந்தமாகும் பஞ்சமி!
தூக்கி எறியப்பட்ட என்னை அரவணைத்து, அன்பு செலுத்தியவர் விஜய்: செங்கோட்டையன் ஓபன் டாக்!
முழு மனதோடு என்டிஏ கூட்டணியில் இணைந்திருக்கிறேன்...தினகரன் அதிரடி
{{comments.comment}}