"நேற்று கேங்ஸ்டர்.. இன்று பாஜக".. அதிர வைக்கும் நெடுங்குன்றம் சூர்யா!

Sep 28, 2023,06:57 PM IST
சென்னை: "தென் சென்னையின் ராஜா.. செங்கல்பட்டு வாத்தியார்.. சிங்கம்" என்று தனது ஆதரவாளர்களால் புகழப்படும் "கேங்ஸ்டர்"  நெடுங்குன்றம் சூர்யா, பாஜகவில் இணைந்து சூட்டோடு சூடாக பதவியையும் பெற்று அவரைப் போன்ற ரவுடிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

"அயோக்கியர்களின் கடைசிப்  புகலிடம் அரசியல்" என்று ஒரு பதம் நீண்ட காலமாகவே உள்ளது.  அது அடிக்கடி உண்மை என்று நிரூபிக்கப்படும். ரவுடியாக, சமூக விரோதியாக வலம் வரும் பலர் பின்னர் ஏதாவது கட்சியில் சேருவார்கள்.. அல்லது அவர்களே கட்சி ஆரம்பிப்பார்கள்.. கூடவே ஜாதியையும் துணைக்கு வைத்துக் கொள்வார்கள். இது உ.பி. முதல் தமிழ்நாடு வரை எல்லா மாநிலங்களிலுமே நீக்கமற நிறைந்திருப்பதுதான். இதில் ஆச்சரியமே கிடையாது.



ஆனால் சமீப காலமாக தமிழ்நாடு பாஜகவில்  ஏகப்பட்ட ரவுடிகள், மாஜி ரவுடிகள், குற்றப் பின்னணி கொண்டவர்கள் சேருவது தொடர் கதையாக உள்ளது. பலருக்குப் பதவியும் கொடுத்து பாஜக தலைமை அழகும் பார்த்துள்ளது.

அந்த வரிசையில் தற்போது நெடுங்குன்றம் சூர்யா இணைந்துள்ளார். இவர் செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அருகே உள்ள நெடுங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர். ஏ கிளாஸ் ரவுடியாக போலீஸாரால் பட்டியலில் சேர்க்கப்பட்டவர். கொலை, கட்டப் பஞ்சாயத்து,  அடிதடி  என இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 200க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

இவரது மனைவி பெயர் விஜயலட்சுமி. இவர் நெடுங்குன்றம் ஊராட்சி வார்டு கவுன்சிலராக இருக்கிறார். சுயேச்சையாக போட்டியிட்டு வென்று பின்னர் பாஜகவில் இணைந்தவர். ஊராட்சி துணைத் தலைவியாக இருக்கிறார், செங்கல்பட்டு மாவட்ட மகளிர் அணித் தலைவியாகவும் இருக்கிறார். தனது மனைவியோடு சேர்ந்து தற்போது சூர்யாவும் பாஜகவில் இணைந்துள்ளார். நேற்றுதான் கட்சியில் சேர்ந்தார். சேர்ந்த உடனேயே அவருக்கு மாநில பட்டியல் அணி செயலாளர் பதவியைக் கொடுத்துள்ளது மாநிலத் தலைமை.



இதையடுத்து இன்று செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக தலைவர் வேத சுப்ரமணியத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார் சூர்யா. அப்போது அவரது மனைவியும் உடன் இருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், என் மீது வழக்குகள் இருப்பது உண்மைதான். ஆனால் தற்போது எந்த பிடியாணையும் எனக்கு எதிராக இல்லை. தற்போது நான் எந்தவிதமான சட்டவிரோதமான காரியங்களிலும் ஈடுபடுவதில்லை. சமூகத்திற்கு தொண்டாற்ற வேண்டும் என்பதால்தான் பாஜகவில் இணைந்துள்ளேன்.

எனக்கு பிரதமர் நரேந்திர மோடி, மாநிலத் தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள் பிடிக்கும். எனவேதான் எனது மனைவியைப் போலவே நானும் பாஜகவில் இணைந்தேன். எனது பெயரை யாராவது தவறாகப் பயன்படுத்தி மிரட்டினால் தாராளமாக போலீஸில் புகார் கொடுக்கலாம். பாஜகவுக்காக ஒரு எறும்பு போல நான் செயல்படவுள்ளேன் என்றார் சூர்யா.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

news

மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்

news

தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

news

தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?

news

எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!

news

முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!

news

உழவனின் உயிர் நண்பன்!

news

தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்