மனிதர்களை மட்டுமல்லாமல்.. ஆடு மாடுகளையும் கடிக்கும் வெறிநாய்கள்.. சீமான் முக்கிய கோரிக்கை!

Feb 19, 2025,06:26 PM IST

சென்னை: திருப்பூர் மாவட்டத்தில் கால்நடைகளை தாக்கி கொல்கின்ற வெறிநாய்களை விரைந்து அப்புறப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

சமீப காலமாகவே தெருக்களில் மாடுகள் நடமாட்டம் அதிகரித்து விட்டது. அதேபோல நாய்களின் நடமாட்டமும் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் நடந்து செல்ல முடியாமலும் வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாமலும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். கால்நடைகளின் உரிமையாளர்கள் மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடுவதால்  பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. சாலைகளில் கால்நடைகள் உலா வருவதாலும் குறுக்கே வருவதாலும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது.


இதில் நாய்த் தொல்லைதான் கொடுமையாக உள்ளது. தெருவுக்கு பத்து நாய்கள் குறையாமல் உள்ளன. அந்த நாய்கள் சண்டை போட்டுக்கொண்டு வாகனங்களில் செல்பவர்களை துரத்துவது, நடந்து செல்லும் பொது மக்களை அச்சுறுத்துவது, என பல்வேறு சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக சாலையில் செல்லும் வெறி நாய்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். வெறி நாய்கள் சாலையில் நடந்து செல்பவர்களை விடாமல் துரத்தி கடித்து குதறும் சம்பவமும் நிறைய நடக்கிறது. 




அப்படித்தான் சென்னையில் கடந்த வருடம் சிறுமி ஒருவரை தெரு நாய் கடித்து குதறிய சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் தெருவில் உலா வரும் கால்நடைகளை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளையும் முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் அதிக அளவில் சுற்றித் திரியும் வெறி நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை  விடுத்துள்ளார். 


இதுதொடர்பாக சீமான் விடுத்துள்ள அறிக்கை: திருப்பூர் மாவட்டம் காங்கேயம், தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவில் சுற்றித்திரியும் வெறிநாய்கள் மனிதர்களையும், கால்நடைகளையும் தாக்குகின்ற கொடுந்துயர நிகழ்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


குறிப்பாக ஆடுகள் மற்றும் இளம் மாடு கன்றுகளைத் தாக்கி உயிரிழப்பினை ஏற்படுத்தி, ஏழை எளிய உழவர் பெருமக்களுக்குப் பெருத்த பொருளாதார நட்டத்தை ஏற்படுத்துகிறது. இதனால் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள கொங்குப் பகுதி மக்கள் மீள முடியாத பொருளாதார இழப்பிற்கு ஆளாகி, செய்வதறியாது தவித்து வருகின்றனர். காங்கேயம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுவெளியில் சுற்றுத்திரியும் வெறிநாய்களைக் கட்டுப்படுத்தக்கோரி மாவட்ட ஆட்சியர் உட்பட அரசு அதிகாரிகளிடம் வேளாண் மக்கள் பலமுறை புகாரளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் செய்வது வன்மையான கண்டனத்துக்குரியது.


ஆகவே, திருப்பூர் மாவட்டத்தில்  கால்நடைகளைத் தாக்கி கொல்கின்ற வெறிநாய்களை மாவட்ட நிர்வாகம் விரைந்து அப்புறப்படுத்த வேண்டுமெனவும், வெறிநாய்களால் கால்நடைகளைப் பறிகொடுத்து பெரும் நட்டத்திற்கு ஆளான வேளாண் பெருங்குடி மக்களுக்கு உரிய இழப்பீட்டினை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Assembly By Election: நாளை மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: அனைத்து ஏற்பாடுகளும் தயார்

news

சென்னை பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலக வழக்கு: வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு வாபஸ்

news

தென்தமிழ் தலையங்கம்: Celluloid World to St Geroge Fort..கோட்டையைப் பிடிக்கத் துடிக்கும் கோடம்பாக்கம்

news

குலுக்கி சர்பத்: தூக்கிப் போட்டு குலுக்கி எடுத்து கிளாஸில் ஊற்றிக் குடிச்சா.. ஆஹா என்ன சுகம்!

news

தலைமை தேர்தல் ஆணையர் விவகாரம்: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

news

2026-ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு: 3 விஞ்ஞானிகளுக்கு விருது!

news

Evening Snacks Time: டேஸ்ட்டியான சேமியா பால் பாயாசம் செய்து சாப்பிடலாமா?

news

சென்னையில் புறநகர் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து: ரயில் சேவைகள் பாதிப்பு!

news

எனக்கு ஆசை.. உனக்கு ஆசை.. உன்னை நான் நேசிப்பதும்.. என்னை நீ நேசிப்பதும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்