திருப்பூர்: விஜய்க்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அதை பாராட்ட வேண்டும். மற்றவர்கள் அதைக் கூட செய்யவில்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தவெக தலைவர் விஜய்யை உயர்வாக பேசியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழ்நாட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை. இருந்தாலும் மண்,மலை, மணல் எனை எல்லாத்தையும் வெட்டி எடுத்தால் இப்படித்தான் இயற்கை பேரிடர்கள் ஏற்படும்.
பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட விஜய் களத்தில் நிற்க முடியாது. ஏனென்றால் களத்தில் பிரச்சனை வரும். பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்றால் அவரை பார்க்க பெரும் கூட்டம் திரண்டு பிரச்சினை ஏற்படும். பிறகு அந்தப் பிரச்சினையை சமாளிக்க வேண்டும். இப்படி நடந்தால் தேவையில்லாத விமர்சனங்கள் எழும்.
விஜய்க்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது அதை பாராட்ட வேண்டும்.மற்றவர்கள் அதைக் கூட செய்யவில்லை. பாவப்பட்ட மக்கள் கூட்டத்தில் நானும் ஒருவராய் அழுகலாம். தம்பி இப்ப பேசுறது முதிர்ச்சியாகவும் ரொம்ப நிதானமாக இருக்கிறது என பலரும் கூறுகிறார்கள். அதேபோல் இங்கு உள்ளவர்களையும் தம்பி எங்கு படித்ததோ அங்கு அனுப்பி விட்டால் நல்லா இருக்கும். தம்பி விஜய்க்கு தேடல் அவசியம். புதிதாக ஒன்றை கற்றுக்கொள்வோம் தெரிந்து கொள்வோம் என்பதை குறை சொல்ல முடியாது அவர் கட்சிக்கு வந்தது மிக்க மகிழ்ச்சி. ஆனால் உதயநிதி பிறந்தநாளை கொண்டாடி இருந்தார்களே அதை என்ன சொல்வது.
சமீபத்தில் ஐயா பொன்முடி உடைய பதவியை ஒரு நீதிமன்றம் பறிக்கும். மூன்று நான்கு மாதங்கள் பிறகு அதே வழக்கு ஒரே நாடு இன்னொரு நீதிமன்றத்திற்கு போன பிறகு அதெல்லாம் அவர் மந்திரியாய் இருக்கலாம் என கூறும். இதே மாதிரி ஒரே நாடும் சட்டமும் வழக்கமும் எங்கேயாவது இருப்பதை பார்த்திருக்கிறீர்களா. கீழமை நீதிமன்றம் குற்றம்னு சொல்லும். உயர் நீதிமன்றம் விடுதலைனு சொல்லும். அப்புறம் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றீர்கள் என்றால் அது குற்றம் என சொல்லும். ஜெயலலிதா வழக்கில் என்ன நடந்தது என்று நீங்களே பார்த்தீர்கள். அது பெரியவங்க விளையாட்டு. நாங்க சின்ன பிள்ளைகள். வேடிக்கைதான் பார்க்க வேண்டும்.
மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என்றால் நீங்கள் ஏன் அவர்களுக்கு வரி செலுத்துகிறீர்கள். மாநிலங்களின் வரிதான் மத்திய அரசுக்கு நிதியாக செல்கிறது. அதை தரமுடியாது என்று சொல்லவேண்டும் என கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
நாம் தமிழர் ஒரு கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கனவே விஜயை தாக்கி தம்பி பாசம் வேறு அரசியல் வேறு என பலமுறை கடுமையாக தாக்கி பேசப்பட்ட நிலையில் இன்று விஜயின் உதவும் எண்ணத்தை பாராட்ட வேண்டும் என பேசி உள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
படத்தில் வில்லன்...நிஜத்தில் ஹீரோ...வெள்ளம் பாதித்த மக்களுக்காக ஓடி வந்த சோனு சூட்
வெனிசுலா விவகாரம்...டிரம்ப்க்கு அமெரிக்க கோர்ட் கொடுத்த அடுத்த குட்டு
அதிகமாக வேலை செய்யும்போது சில நேரங்களில் வாழ்க்கையை இழந்துவிடுகிறோம்: ஏ.ஆர். ரகுமான்
மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த பாடில்லை.. மழைநீரும் வடிந்த பாடில்லை.. எடப்பாடி பழனிச்சாமி
உட்கட்சி பூசல்களை சரி செய்க...தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித்ஷா எச்சரிக்கை
விராட் கோலிக்கு லண்டனில் உடல் தகுதி தேர்வு நடத்த அனுமதி
பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கவிதா அறிவிப்பு
திருமண நிகழ்வுகள், வேலைகள் இருப்பதால் செல்லவில்லை... டெல்லி செல்லாதது குறித்து அண்ணாமலை விளக்கம்!
அன்புமணிக்கு செப்.,10 ம் தேதி வரை மீண்டும் அவகாசம் : டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
{{comments.comment}}