சென்னை: நேரடி நெல் கொள்முதல் தொடர்பாக, 24 மணி நேரமும் செயல்படக்கூடிய உழவர் உதவி மையம் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மேலாண்மை இயக்குனரின் வாட்ஸ் அப் எண்ணிலும் புகார்களை தெரிவிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
அதாவது நெல் கொள்முதல் மையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் நெல் மூட்டைகளுக்கு லஞ்சம் பெறுவதாக தொடர் புகார் எழுந்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகம் அறிவித்துள்ளது.
அதன்படி, விவசாயிகள் இனி நேரடி நெல் கொள்முதல் தொடர்பான புகார்களை 1800 599 3540 என்ற இலவச எண்ணில் தெரிவிக்கலாம். மேலும் நுகர்வோர் வாணிப கழக மேலாண்மை இயக்குனர் 9445257000 என்ற whatsapp எண்ணிலும் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் ஆணைபடியும், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள்வழங்கல் துறை அமைச்சர் அவர்களின் அறிவுரையின்படியும் மாநில முழுவதும் நெல் பயிரிடப்படும் விவசாயிகளின் நலன் கருதி 2600 க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நெல் கொள்முதல் நிலையங்களில் நாளொன்றிற்கு சுமார் 1200 எண்ணிக்கையிலான விவசாயிகளிடமிருந்து சுமார் 60,000 மெட்ரிக் டன் வரையிலான நெல் கொள்முதல் செய்யப்பட்டு, கொள்முதல் செய்யப்பட்ட நெல்லிற் குண்டான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் நேரடியாக வரவு வைக்கப்பட்டு, நெல் நகர்வு செயல்பட்டு வருகிறது. சில நெல் கொள்முதல் மையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளுக்கு கையூட்டு வாங்குவதாக புகார்கள் வருகின்ற காரணத்தினால் நுகர் பொருள் வாணிப கழகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
* சென்னை தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய 1800 599 3540 என்ற எண்ணுடன் இயங்கி வரும் உழவர் உதவி மையம் இலவச தொலைபேசியில் புகார்களை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் குறித்த புகார்களை தெரிவிக்கலாம்.
* மேலும் அனைத்து நேரடி கொள்முதல் நிலையங்களிலும் மண்டல மேலாளர், முதுநிலை மண்டல மேலாளர் உள்ளிட்ட அலைபேசி எண்களுக்கும் விவசாயிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. அந்த அலைபேசி எண்களையும் தொடர்பு கொண்டு விவசாயிகள் புகார் தெரிவிக்கலாம்.
* இத்தகைய புகார்களை தடுத்திடும் விதமாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் கூடுதல் பதிவாளர் நிலையில் பிரத்தியோக கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு, அவருடைய கட்டுப்பாட்டின் கீழ் 8 குழுக்கள் அமைக்கப்பட்டு மாநிலம் முழுவதும் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு குழுவிலும் தரக்கட்டுப்பாடு அலுவலர் ஒருவரும் மற்றொரு கண்காணிப்பு அலுவலரும் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவானது எழும் புகார்களின் அடிப்படையில் உடனுக்குடன் தொடர்புடைய மாவட்டங்களுக்கு நேரில் சென்று உரிய விசாரணையிணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறது.
* மேலும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் அவர்களின் அலைபேசி எண்ணை 94 45 25 7000-க்கு மட்டும் புகார்களை அளிக்கலாம். புகார்களுக்கு ஆதாரமாக ஆவணங்களோ அல்லது காணொளியோ இருந்தால் அதையும் பதிவிடலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அகமதாபாத் விமான விபத்து.. குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
அகமதாபாத்தில் விமான விபத்து...133 பேர் பலி... பயணிகளில் 169 பேர் இந்தியர்கள்.. ஏர் இந்தியா தகவல்!
அகமதாபாத்தில் விமான விபத்து... விடுதியில் சாப்பிட்டு கொண்டிருந்த மருத்துவ மாணவர்கள் 5 பேர் பலி?
ராஜ்யசபா எம்.பி ஆனார் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்.. அதிமுக, திமுக வேட்பாளர்களும் வெற்றி!
அகமதாபாத்தில் பரபரப்பு.. ஏர்இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியது.. 200 பயணிகளின் நிலை என்ன?
காவல்துறை தரம்தாழ்ந்துவிட்டது... இதுதான் திராவிட மாடல் திமுக அரசு தமிழை வளர்க்கும் முறையா?: சீமான்!
6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு… 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்... வானிலை ஆய்வு மையம்
என்னை குலசாமி என சொல்லிக்கொண்டே நெஞ்சில் குத்துகிறார்கள்: டாக்டர் ராமதாஸ் வேதனை பேச்சு!
Vijay Rupani: விமான விபத்தில் சிக்கிய.. முன்னாள் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி மரணம்!
{{comments.comment}}