New year resolutions.. 2025ம் ஆண்டு பிறக்கப் போகிறது.. மறக்காம இந்தாண்டு இதை பாலோ பண்ணுங்க!

Dec 31, 2024,08:43 PM IST

சென்னை:  புது வருடம் நாளை பிறக்க இருக்கிறது. புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு 2025 ஆம் ஆண்டில் என்ன வெல்லலாம் செய்யலாம் என்று பல திட்டங்கள் தீட்டி இருப்பீர்கள். ஆனால் 2025 ஆம் ஆண்டில் நம்முடைய உடல் நலத்தில் கவனம் செலுத்துவது தொடர்பாக ஒரு தீர்மானம் எடுக்க முயற்சி செய்யுங்கள். 


அதாவது வருடா வருடம் புது வருட பிறப்பை முன்னிட்டு எல்லாரும் நான் என்னிடம் உள்ள தீய எண்ணங்கள், பழக்கவழக்கங்களை புறம் தள்ளிவிட்டு நல்ல பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பேன் என பல்வேறு வகையான தீர்மானங்கள் எடுப்பது வழக்கம். அந்த வரிசையில் இந்த வருடம் உங்களுடைய தீர்மானங்கள் உடல் நலத்தில் அக்கறை செலுத்துவது தொடர்பான தீர்மானங்களாக இருக்க வேண்டும். இது தொடர்பாக எளிமையான முறையில் சில டிப்ஸ்களை உங்களுக்கு தருகிறோம்.




சூரிய நமஸ்கார்:


முதலில் காலையில் எழுந்து யோகாசனம் செய்வதை வழக்கமாக செயல்படுத்துங்கள். உங்களால் முடியவில்லை என்றாலும் சூரிய நமஸ்கார ஆசனம் ஒன்றை  மட்டுமாவது செய்யுங்கள். இந்த ஆசனம் ஒன்று செய்தாலே நம் உடம்பில் உள்ள 12 சக்கரங்களும் சீராக இயங்குமாம். இதன் மூலம் மிகவும் சக்தி வாய்ந்த எனர்ஜியை கிடைக்கும்.


மூச்சுப் பயிற்சி:


நாம் வாழ்வதற்கு மிகவும் இன்றியமையாதது சுவாசம். அதாவது காற்று. நம் சுவாசம் சீராக உள்ளிழுத்து வெளி விடுகிறோமா என்பதை கவனியுங்கள். நம் சுவாசம் சீராக இருந்தாலே நம் உடலில் உள்ள சக்திகளை திரட்டி சக்கரங்களை சீராக இயங்கச் செய்து அதே வேளையில் வேண்டாத தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றும்.இது மிகவும் முக்கியமான பயிற்சி.


அப்படி உங்களுக்கு இந்த மூச்சுப் பயிற்சி கடினமாக இருந்தாலும் தினசரி ஒரு பலூன் ஒன்றை எடுத்துக்கொண்டு நன்றாக நம் மூச்சை வெளிவிட்டு உள்ள இழுத்து பலூனை காற்றால் நிரப்பி பயிற்சி செய்யுங்கள்.இது நுரையீரலுக்கான சிறந்த பயிற்சி.


தண்ணீர் குடிப்பது: 


காலையில் எழுந்தவுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்தினால் நமது உணவுப் பாதையில் தேங்கி இருக்கின்ற கழிவுகள் வெளியேறி உடல் புத்துணர்வு பெறும். 


தொற்றுகள் நீங்க:


இரவில் தூங்குவதற்கு முன்பு வெதுவெதுப்பான நீரில் கல்லுப்பை கரைத்து அதை தினசரி தொண்டையில் படும்படி வாய் கொப்பளித்து வந்தால் தொண்டையில் உள்ள சளி இளகி வெளியேறும். அத்துடன் பாக்டீரியா வைரஸ் தொற்றுகள் அழிந்து விடும். தொண்டைப் புண்களும் சரியாகும். வாயில் உள்ள கிருமிகளும் அகலும்.


சர்க்கரை அளவு கட்டுக்குள் வர:


முளைவிட்ட பச்சை பயிர்கள் தினசரி சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். நமது உடலில் நைட்ரிக் ஆக்சைடை அதிகப்படுத்தினால் நம்  நாம் உண்ணும் உணவு  வழியாக செரிமானங்கள் எளிதாக நடக்கும். நைட்ரேட் உள்ள உணவுகள் என்னவென்றால் பீட்ரூட் ஜூஸ், இஞ்சி, பூண்டு, பழங்கள், பச்சை காய்கறிகள், புதினா, கருவேப்பிலை, கொத்தமல்லி, வல்லாரை கீரை போன்றவற்றை சாறாக எடுத்து உட்கொள்ளலாம்.  அதேசமயம், பசலைக் கீரை, முருங்கைக்கீரை, முடக்கத்தான், முள்ளு முருங்கை போன்றவற்றை பச்சையாக சாரு எடுத்து பருக கூடாது என்பதை மறந்து விடாதீர்கள்.


செரிமான பிரச்சினை நீங்க:


சீரகம்,கொத்தமல்லி விதை, சோம்பு, ஆகிய மூன்றையும் சமபங்கு எடுத்து கொதிக்க வைத்து அந்த தண்ணீரை பருகி வந்தால் செரிமான பிரச்சனைகள் நீங்கும். 


அல்சர் நீங்க :


மாதுளை+ தேங்காய் சேர்த்து ஜூஸ் செய்து பருகினால் அல்சர் குணமாகும். அல்லது வெண்பூசணியை ஜூஸ் செய்து குடித்தாலும் அல்சர் குணமாகும். இல்லையென்றால் முட்டைகோஸ் வேகவைத்த தண்ணீரை குடித்தாலும் அல்சர் குணமாகும். 


நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க: 


விரலி மஞ்சள் அதிமதுரம் சுக்கு, மிளகு, துளசி ஆகியவை சமபங்கில் எடுத்து பவுடராக்கி கொள்ள வேண்டும் பிறகு இந்த பவுடரை தினசரி 100 எம்எல் தண்ணீரில் கொதிக்க விட்டு, 50 ml ஆக வற்றிய பிறகு குடித்து வந்தால் காய்ச்சல் தலைவலி, சளி இருமல் குணமாகும்.


சிறுநீர் கற்களை வெளியேற்ற: 


சிறுநீர் கற்களை எளிதாக வெளியேற்ற சிறு நெருஞ்சியை கொதிக்க வைத்து அந்த தண்ணியை பருகுங்கள்.


இது எல்லாவற்றையும் விட, கவலைகளைத் துறந்து நன்றாக வாய்விட்டு சிரியுங்கள். சிரிப்பதினால் நம் உடலில் உள்ள அனைத்து நரம்புகளும் விரிவடைந்து ரத்த ஓட்டத்தை சீராக்கும். அதே சமயத்தில் கோபம் கொள்வதால் நம் உடலில் உள்ள நரம்புகள் சுருங்கி கசங்குவதால் நம் வாழ்நாட்கள் குறையத் தொடங்கும். இது நிச்சயம் உண்மை. அமெரிக்காவில் லாபிங் தெரபி என்ற ஒன்றை மக்கள் கடைபிடித்து வருகின்றனர்.


Happy new year மக்களே!



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அமித்ஷாவா அவதூறு ஷாவா?...கடுமையாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்

news

ஜனநாயகன் பட வழக்கு...படம் ரிலீசாகும் ஜனவரி 09ம் தேதி காலை தீர்ப்பு

news

ஆட்டத்தை துவங்கிய அதிமுக...பாமக நிறுவனர் ராமதாசை சந்திக்கிறார் சி.வி.சண்முகம்

news

ஜல்லிக்கட்டு ஒன்றும் ஐபிஎல் போட்டி அல்ல: உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி

news

அதிமுக கூட்டணியில் இணைந்தது அன்புமணி தரப்பு பாமக

news

விஜய்யின் கடைசிப்படம் ஜனநாயகன் என்பதை நான் நம்பவில்லை: தமிழிசை செளந்தரராஜன்

news

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தக வெளியீட்டிற்குத் தடை

news

மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயலும் திமுக: அண்ணாமலை காட்டம்

news

தமிழகத்தில் ஆவில் பால் பச்சை பாக்கெட் விலை உயர்வா? ஆவின் நிர்வாகம் விளக்கம்

அதிகம் பார்க்கும் செய்திகள்