மீண்டும் வேலையை காட்ட ஆரம்பித்த தங்கம் விலை.. இன்றும் சவரனுக்கு ரூ.160 உயர்வு!

Oct 17, 2024,10:58 AM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை  ஒரு சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன்  ரூ.57,280க்கும், ஒரு கிராமின் விலை  ரூ.7,160க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 


அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்காரணமாக தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இந்நிலையில், கடந்த அக்டோபர் 14,15ம் தேதிகளில் குறைந்திருந்த தங்கம் நேற்றும் இன்றும் உயர்ந்துள்ளது. 


தீபாவளி பண்டிகை வரயிருப்பதினால், நகை விலை உயர்வு வாடிக்கையாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நகை விலை ஒரு நாள் ஏற்றம், ஒரு நாள் இறக்கம் என்று இருந்து வருகிறது. இந்த ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டாலும் பொதுவாக நகை விலை என்பது உயர்ந்து கொண்டே தான் செல்கிறது. இதனால் இனி வரும் காலங்களில் நகை விலை உயர்விற்கு  வழி வகுக்கும் என்றும், நகையில் முதலீடு செய்பவர்களுக்கு வருங்காலம் பொன்னான காலமாக இருக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.




சென்னையில் இன்றைய தங்கம் விலை....


சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.7,160க்கு விற்கப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.7,811க்கு விற்கப்பட்டு வருகிறது.


8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 57,280 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.71,600 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.7,16,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,811 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.62,488 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.78,110 ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.7,81,100க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,160க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,811க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22  கேரட் தங்கம் விலை ரூ.7,175க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,826க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,160க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,811க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,160க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,811க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,160க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,811க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,160க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,811க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,165க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,816க்கும் விற்கப்படுகிறது.


சென்னையில் இன்றைய வெள்ளி விலை....


கடந்த மாத இறுதியில் இருந்து வெள்ளி விலை பெரிய அளவில் எந்த மாற்றமும் இன்றி இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்றைய வெள்ளி விலை எந்த மாற்றமும்  இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.


1 கிராம் வெள்ளி விலை ரூ.103 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 824 ஆக உள்ளது.  

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,030 ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,300 ஆக உள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,03,000 ஆக உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்