ஜப்பானில் இருந்து.. ஆன்லைனில் கேபினட் கூட்டத்தை நடத்திய.. ஒடிஷா முதல்வர்!

Apr 10, 2023,04:55 PM IST
புபனேஸ்வர்: ஒடிஷா முதல்வர் நவீந் பட்நாயக் 6000 கிலோமீட்டருக்கு அப்பால்  இருந்தபடி, ஆன்லைனிலேயே அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தி அசர வைத்துள்ளார்.

அதாவது ஜப்பானிலிருந்து கொண்டு இந்த அமைச்சரவைக் கூட்டத்தை அவர் நடத்தினார். ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. வெளிநாட்டிலிருந்து இந்தியா மாநில அரசு ஒன்றின் அமைச்சரவைக் கூட்டத்தை ஒரு முதல்வர் நடத்தியது இதுவே முதல் முறையாகும்.



ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார் நவீன் பட்நாயக். ஜப்பானிலிருந்து முதலீடுகளை ஈர்ப்பதற்கான பயணமாகும் இது. கியோட்டோ நகரில் முகாமிட்டுள்ள அவர்  நேற்று அங்கிருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலமாக அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தினார். தலைநகர் புபனேஸ்வரிலிருந்து கியோட்டோ நகரமானது 6000 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

அமைச்சர்களும் பல்வேறு இடங்களில் இருந்தனர். அவரவர் இருந்த இடத்திலிருந்தபடியே இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய கோப்புகள் பரிசீலிக்கப்பட்டு அமைச்சர்களும் இருந்த இடத்திலிருந்தே அவற்றுக்கு கையெழுத்திட்டனர்.

தொழில்நுட்பத்தால் நிறைய நல்லது செய்ய முடியும். மக்களுக்கான சேவைகளை மிகச் சிறப்பாக செய்ய தொழில்நுட்பம் உதவி புரிகிறது. அதைத்தான் இந்த அமைச்சரவைக் கூட்டமும் நிரூபித்துள்ளது என்றார் நவீன் பட்நாயக்.

தொழில்நுட்ப வசதியால் இப்படியும் அரசாட்சி நடக்கிறது.. ஆனால் சில மாநிலங்களிலோ ஆன்ட்ராய்ட் போனை வைத்துக் கொண்டு சட்டசபையில் சில எம்எல்ஏக்கள் "சீன் படம்" பார்க்கும் சம்பவங்களும் நடந்துள்ளது, நடந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!

news

குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!

news

எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு

news

குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

news

பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு

news

தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!

news

Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்