"முதல்ல  1 ரூபாய் போடுவோம்".. மகளிர் உரிமைத் தொகை திட்ட ஏற்பாடுகள் தடபுடல்!

Sep 13, 2023,02:37 PM IST
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் செப்டம்பர் 15ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் முதல் கட்டமாக அனைத்து பயனாளிகளின் வங்கிக் கணக்குக்கும் ரூ.  1 அனுப்பி சோதனை செய்யும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

மேலும் யாரெல்லாம் இந்தத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனரோ அவர்களுக்கெல்லாம் உங்களைத் தேர்வு செய்துள்ளோம் என்ற எஸ்எம்எஸ்ஸும் அனுப்பப்படுகிறது. அதேபோல நிராகரிக்கப்பட்டவர்களுக்கும் கூட அதற்கான காரணத்தை விளக்கி குறுஞ்செய்தியை அதிகாரிகள் அனுப்புகிறார்களாம்.



திமுக அரசின் மிகப் பெரிய திட்டம் எது என்றால் அது இதுதான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வர்ணித்துள்ள திட்டம்தான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 1000 உரிமைத் தொகையாக வழங்கப்படவுள்ளது. மிகப் பெரிய திட்டமாக பார்க்கப்படும் இதில் எந்தவிதமான தவறும் நடந்து விடக் கூடாது என்பதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மிக மிக கவனமாக இருக்கிறார்.

மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் பயனாளிகளாக இதுவரை 1,06,50,000 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களது வங்கிக் கணக்குகளில் தற்போது ரூ. 1 வரவு வைக்கப்பட்டு வருகிறதாம். அதாவது போடும் பணம் சரியாக போகிறதா என்பதை உறுதி செய்வதற்காக ஆளுக்கு ஒரு ரூபாய் கணக்கில் போடப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் பயனாளிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி அதுவும் பரிசோதிக்கப்படுகிறது.

திமுக அரசின் மாபெரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் 15ம் தேதி தொடங்கி வைக்கிறார்.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்