பாரீஸ்: எகிப்து நாட்டைச் சேர்ந்த வாள் வீச்சு வீராங்கனை நடா ஹபீஸ் தனது வயிற்றில் 7 மாத கருவை சுமந்து கொண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளார்.
எகிப்து நாட்டைச் சேர்ந்தவர் நடா ஹபீஸ். இவர் சிறந்த வாள் வீச்சு வீராங்கனை. 2018 ஆம் ஆண்டு ஆப்பிரிக்கா மண்டல சாம்பியன்ஷிப்பில் ஒரு வெள்ளியும், 2014 மற்றும் 2019களில் இரண்டு வெண்கலத்தையும் வென்றவர். தற்போது பாரீஸில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் நடா ஹபீஸ் வாள்வீச்சில் பங்கேற்றார். இதில் தன்னுடைய முதல் போட்டியில் அமெரிக்க வீராங்கனை எலிசபெத்தை எதிர்த்து 15 க்கு 13 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினார். தொடர்ந்து நடைபெற்ற அடுத்த சுற்று போட்டியில் தென்கொரியா வீராங்கனையான ஜியோன் ஹயோங்கியை எதிர்த்து போட்டியிட்டு 15 க்கு 7 என்ற கணக்கில் தோல்வியை தழுவினார்.
இந்த நிலையில் நடா ஹபீஸ் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் ஒரு செய்தியை பதிவிட்டுள்ளார். அச்செய்தியை உலகமே திரும்பிப் பார்த்து பலரின் கவனத்தையும் ஈர்க்கப் பெற்றுள்ளது. அதனை அனைவரும் பாராட்டி வருகின்றனர். நடா ஹபீஸ் கூறுகையில், களத்தில் இருந்தது இரண்டு பேர் என்று நினைக்கிறீர்கள். ஆனால் இருந்தது மூன்று பேர். ஒன்று நான், ஒன்று என் எதிரணி வீராங்கனை. மற்றொன்று இந்த உலகத்தை இன்னும் காணாத என் குட்டிக் குழந்தை. நானும் என் குழந்தையும் பல சவால்களை சந்தித்து இந்த போட்டியில் பங்கேற்று இருக்கிறோம்.
உணர்வுபூர்வமாகவும் உடல் ரீதியாகவும் பல சவால்கள் நிறைந்த இந்தப் போட்டியை நான் சந்தித்தேன் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இச்செய்தி சோசியல் மீடியா முழுவதும் பரவி பலரையும் திரும்பிப் பார்க்க வைத்து வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பெண்கள் இயல்பிலேயே சக்தி வாய்ந்தவர்கள், எதையும் சாதிக்கும் திறமை படைத்தவர்கள். துணிந்தால் எதுவும் காலடியில் என்பதைத்தான் நடா ஹபீஸ் நிரூபித்துள்ளார்.
படத்தில் வில்லன்...நிஜத்தில் ஹீரோ...வெள்ளம் பாதித்த மக்களுக்காக ஓடி வந்த சோனு சூட்
வெனிசுலா விவகாரம்...டிரம்ப்க்கு அமெரிக்க கோர்ட் கொடுத்த அடுத்த குட்டு
அதிகமாக வேலை செய்யும்போது சில நேரங்களில் வாழ்க்கையை இழந்துவிடுகிறோம்: ஏ.ஆர். ரகுமான்
மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த பாடில்லை.. மழைநீரும் வடிந்த பாடில்லை.. எடப்பாடி பழனிச்சாமி
உட்கட்சி பூசல்களை சரி செய்க...தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித்ஷா எச்சரிக்கை
விராட் கோலிக்கு லண்டனில் உடல் தகுதி தேர்வு நடத்த அனுமதி
பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கவிதா அறிவிப்பு
திருமண நிகழ்வுகள், வேலைகள் இருப்பதால் செல்லவில்லை... டெல்லி செல்லாதது குறித்து அண்ணாமலை விளக்கம்!
அன்புமணிக்கு செப்.,10 ம் தேதி வரை மீண்டும் அவகாசம் : டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
{{comments.comment}}