ஒரே நாடு ஒரே தேர்தல் திட்ட சட்ட மசோதா.. மக்களவையில் தாக்கல்.. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு!

Dec 17, 2024,05:45 PM IST

புதுடெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கான ஒப்புதல் ஏற்கனவே பெறப்பட்ட நிலையில், இத்திட்டம் தொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள சட்ட மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதை அறிமுக நிலையிலேயே எதிர்க்கட்சிகள் ஒரே குரலில் எதிர்த்தன.


நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டசபைத் தேர்தல்களை  ஒரே நேரத்தில்  நடத்துவதற்காக ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை கடந்த ஆட்சியில் இருந்தே மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.  இத்திட்டம் குறித்து ஆய்வு அறிக்கை தாக்கல் செய்ய கடந்த செப்டம்பர் மாதம் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.  இந்த மத்திய குழு பல்வேறு அரசியல் கட்சிகள், முன்னாள் நீதிபதிகள், பொதுமக்கள் என பலரிடமும் கருத்து பெறப்பட்டு அதற்கான பரிந்துரை அறிக்கையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூவிடம் சமர்ப்பித்தது. 


அதன் பின்னர் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு குடியரசுரத் தலைவர் இந்த அறிக்கையை அனுப்பி வைத்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 12ம் தேதி மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கான மசோதாவுக்கு ஒப்புதல்  அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மசோதா வரும் டிசம்பர் 16ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என கூறப்பட்டது. இதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளடக்கிய, இந்தியா கூட்டணி தலைவர்கள் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 




இந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் தேர்தலுக்கான மசோதா இன்று பிற்பகல் 12 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது.  129 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமாக இன்று தாக்கல் ஆனது. தேர்தல் செலவினங்களை குறைப்பதற்காக ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நடைமுறைப்படுத்துவதாக கூறப்பட்டுள்ள வரும் நிலையில் இத்திட்டத்தை மத்திய சட்ட துறை அமைச்சர் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். இதை அறிமுக நிலையிலேயே எதிர்க்கட்சிகள் அனைத்தும் எதிர்த்தன. தற்போது மசோதா மீதான விவாதம் நடந்து வருகிறது.


ஏற்கனவே அதானி விவகாரம் மணிப்பூர் கலவரம் உள்ளிட்டவைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

படத்தில் வில்லன்...நிஜத்தில் ஹீரோ...வெள்ளம் பாதித்த மக்களுக்காக ஓடி வந்த சோனு சூட்

news

வெனிசுலா விவகாரம்...டிரம்ப்க்கு அமெரிக்க கோர்ட் கொடுத்த அடுத்த குட்டு

news

அதிகமாக வேலை செய்யும்போது சில நேரங்களில் வாழ்க்கையை இழந்துவிடுகிறோம்: ஏ.ஆர். ரகுமான்

news

மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த பாடில்லை.. மழைநீரும் வடிந்த பாடில்லை.. எடப்பாடி பழனிச்சாமி

news

உட்கட்சி பூசல்களை சரி செய்க...தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித்ஷா எச்சரிக்கை

news

விராட் கோலிக்கு லண்டனில் உடல் தகுதி தேர்வு நடத்த அனுமதி

news

பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கவிதா அறிவிப்பு

news

திருமண நிகழ்வுகள், வேலைகள் இருப்பதால் செல்லவில்லை... டெல்லி செல்லாதது குறித்து அண்ணாமலை விளக்கம்!

news

அன்புமணிக்கு செப்.,10 ம் தேதி வரை மீண்டும் அவகாசம் : டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்