சென்னை: சென்னை முழுவதும் ஒரே டிக்கெட்டில் சிட்டி பஸ், மெட்ரோ, புறநகர் ரயில் என மூன்று வகையான வாகனங்களில் பயணம் செய்யும் திட்டம், அடுத்த ஆண்டு ( 2025) மார்ச் மாதம் அமல்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக மாநகரப் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் மட்டுமே வரும் டிசம்பரில் இந்த ஒரே டிக்கெட் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
சென்னையில் கிட்டத்தட்ட 70 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். புறநகர்களில் உள்ளோரையும் சேர்த்தால் இது 1 கோடியைத் தாண்டும். பணி நிமித்தமாக வெளியூரிலிருந்து வருபவர்களும் சென்னையில் அதிகம் உள்ளனர். மேலும் ஃபுளோட்டிங் பாப்புலேஷனும் சென்னையில் அதிகம். அதாவது காலையில் வந்து விட்டு மாலையில் அவரவர் ஊர் திரும்புவோர். இதை ஃபுளோட்டிங் பாப்புலேஷன் என்பார்கள். இவர்கள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதற்கு மூன்று வகையான போக்குவரத்து முறையை முக்கியமாக கையாளுகிறார்கள். புறநகர் ரயில்கள், சிட்டி பஸ் மற்றும் மெட்ரோ ரயில் ஆகியவையே அவை.
இந்த வசதிகள் மூன்றையும் மக்கள் பயன்படுத்த தனித்தனியாக பயண டிக்கெட்டுகள் எடுத்து வருகின்றனர். அதாவது பஸ்ஸுக்கு தனி டிக்கெட், ரயிலுக்கு தனி, மெட்ரோவுக்கு தனி. ஒவ்வொன்றையும் டிக்கெட் எடுக்க அதற்கு தனியாக மெனக்கெட வேண்டியுள்ளது. இந்த அசவகரியத்தைத் தவிர்த்து 3க்கும் ஒரே டிக்கெட்டைப் பயன்படுத்தும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, இனி இந்த அனைத்து போக்குவரத்து சேவைகளுக்கும் ஒரே டிக்கெட் தான். தனித்தனியாக டிக்கெட் எடுக்க தேவையில்லை. ஒரே இடத்தில் டிக்கெட் வாங்கினால் போதும், இதை வைத்துக் கொண்டு பேருந்து, மெட்ரோ, மற்றும் புறநகர் ரயில் என மூன்று வகையான போக்குவரத்துகளிலும் பயணங்களை மேற்கொள்ளலாம்.
சென்னை முழுவதும் ஒரே டிக்கெட்டில் மூன்று வகையான பொது போக்குவரத்து பயணங்களை மேற்கொள்ளும் திட்டம் அடுத்த ஆண்டு (2025) மார்ச் மாதம் நடைமுறைக்கு வரவுள்ளது. இருப்பினும் முதல் கட்டமாக, இந்தத் திட்டம் வரும் டிசம்பரில் மாநகர பேருந்துகள், மெட்ரோ ரயில்களில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான செயலியை உருவாக்கும் பணியை தற்போது மூவிங் டெக் இன்னோவேஷன்ஸ் ( moving tech innovations private limited ) என்ற நிறுவனத்திற்கு ஆணை வழங்கியுள்ளது சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம்.
இந்த மூன்று வகையான போக்குவரத்துகளில் பயணம் செய்ய ஒரு கார்டு அல்லது பாஸ் போன்ற அட்டை வழங்கப்படும். அதன் மூலம் மெட்ரோ நிலையத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்க முடியும். அந்த கார்டை கொண்டு நடத்துனரிடம் கொடுக்கப்பட்டுள்ள ஸ்கேனர் மூலம் ஸ்கேன் செய்து பேருந்தில் பயணிக்கலாம். இதே போல மின்சார ரயில்களில் சோதனை செய்யும் நேரத்தில் கார்டை ஸ்கேன் செய்து மின்சார ரயிலிலும் பயணம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}