தெளிவாக ஸ்கெட்ச் போடும் இ-ந்-தி-யா... பாஜக உடன் நேருக்கு நேர் மோத தயார்

Sep 01, 2023,10:35 AM IST
டெல்லி : பாஜக.,விற்கு எதிராக ஒன்றிணைந்துள்ள எதிர்க்கட்சிகளின் இ-ந்-தி-யா கூட்டணியின் 3வது கூட்டம் தற்போது மும்பையில் நடந்து வருகிறது. நேற்றும் இன்றும் நடக்கும் கூட்டத்தில் தொகுதி பங்கீடு குறித்து எதிர்க்கட்சிகள் பேசி முடிவு செய்ய உள்ளதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

லோக்சபா தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக.,வை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒன்றிணைந்துள்ள இ-ந்-தி-யா கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டம் மும்பையில் நேற்று துவங்கியது. இன்றும் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனை நடைபெற உள்ளது. இன்று தொகுதி பங்கீடு குறித்த முடிவு அறிவிக்கப்படலாம் என எதிர்க்கப்பட்டது. ஆனால் அது கிடையாதாம். தொகுதி பங்கீடு குறித்து செப்டம்பர் 30 ம் தேதி தான் முடிவு செய்யப்பட உள்ளதாம். அப்போ இந்த இரண்டு நாள் கூட்டத்தில் என்ன தான் பேசுவாங்க என்பவர்களுக்கு ஆச்சரியப்பட வைக்கும் பல தகவல்கள் உள்ளன.



தற்போது நடைபெற்று வரும் இ-ந்-தி-யா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் இதுவரை எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் இவைகள் தான்...

1. ஒவ்வொரு தொகுதியிலும் பாஜக வேட்பாளருக்கு எதிராக எதிர்கட்சி கூட்டணிகள் சார்பில் ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே நிறுத்தப்படுவார். ஓட்டு பிரியாமல் இருப்பதை தடுப்பதற்காக இந்த பிளான்.

2. தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்வதற்கு முன் பல்வேறு மாநிலங்களில் பேரணி நடத்தி, ஆதரவு திரட்டுவதுடன் மக்களின் மனநிலையை கணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

3. இது தவிர கூட்டணிக்கான சின்னம், தேர்தல் ஒருங்கிணைப்பு குழு அமைப்பது குறித்து தான் தற்போது நடக்கும் கூட்டத்தில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிதாம்.

4. சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று சொன்னது போல், இன்று நடக்கும் கூட்டத்திற்கு பிறகு இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட, எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து கூட்டணி கட்சிகள் செய்தியாளர்களை சந்தித்து தெரிவிப்பார்கள் என சொல்லப்படுகிறது.

5. மகாராஷ்டிராவை சேர்ந்த 2 சிறிய கட்சிகள், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த 3 கட்சிகளும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இணைய ஆதரவு தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

6. இதற்கிடையில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியான ஒய்.எஸ்.ஷர்மிளா, டில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசி உள்ளார். தெலுங்கானா ஒய் எஸ் ஆர் கட்சியை காங்கிரசுடன் இணைப்பது குறித்து அவர் பேசியதாக சொல்லப்படுகிறது.

7. பல்வேறு மாநிலங்களில் உள்ள சிறிய கட்சிகளையும் தங்களுடன் இணைத்துக் கொள்ள இ-ந்-தி-யா கூட்டணி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ஆனால் பாஜக, இந்த கூட்டணி சுயநலக் கூட்டணி. ரூ.20 லட்சம் கோடி ஊழல் செய்த கட்சிகள் ஒன்று சேர்ந்து அமைத்துள்ள கூட்டணி என விமர்சனம் செய்து வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்