ஆபரேஷன் அஜய்:  2வது நாளாக 235 இந்தியர்கள் மீட்பு!

Oct 14, 2023,03:59 PM IST
டெல்லி: இஸ்ரேலில் நடந்து வரும் போரில் சிக்கியுள்ள இந்தியர்கள் 235  பேர் ஆபரேஷன் அஜய் திட்டத்தின் மூலம் மீட்கப்பட்டு மூலம்  டெல்லி வந்தனர். இதில் 28 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

ஹமாஸ் நடத்திய எதிர்பாராத தாக்குதலால்  நிலைகுலைந்த இஸ்ரேல் தற்போது ஹமாஸை தீவிரமாக தாக்கி வருகிறது. இப்போர் இன்றுடன் 8வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  இஸ்ரேல் முழு அளவில் போரில் இறங்கி காஸா முனையை சிதைத்து  வருகிறது. உயிரிழப்பைப் பற்றி அது கவலைப்படவில்லை. மாறாக, காஸாவை இருக்கும் இடம் தெரியாமல் ஆக்கி, அந்தப் பகுதியை முழுமையாக கைப்பற்றுவதில் தீவிரமாக உள்ளது. 



ஹமாஸை பூமியிலேயே இல்லாத அளவுக்கு அழிக்கவும்  இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. நிலைமை மோசமாகி வருவதால், இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு ஆபரேஷன் அஜய் எனும் திட்டத்தை உருவாக்கியது. இந்த திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் சிக்கி தவித்த 212 இந்தியர்கள் நேற்று தனி விமானம் மூலமாக டெல்லி வந்தனர் . நேற்று வந்த 212 பேரில் 21 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களில். அவர்களில் 7 பேர் டெல்லியிலிருந்து கோவை சென்றனர்.  மற்றவர்கள் சென்னை வந்து சேர்ந்தனர். 

அதனை தொடர்ந்து 2வது நாளாக இன்று 235 பேர் தனி விமானம் மூலமாக டெல்லி வந்தனர். அவர்களில் 28 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். மேலும் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு விரைந்து செயல்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்