டெல்லி: எதிர்க்கட்சியாகவே இருக்க வேண்டும் என்று இங்கு இருப்போர் உறுதி பூண்டுள்ளதாக தெரிகிறது. அந்த உறுதியை நான் பாராட்டுகிறேன். கடைசி வரை அவர்கள் எதிர்க்கட்சியாகவே இருப்பார்கள். பார்வையாளர் மாடத்தில் இருக்கப் போவதையும் நாம் பார்ப்போம் என்று கூறியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை மீதான விவாதத்திற்குப் பதிலளித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று பதிலுரை நிகழ்த்தினார். அவரது பேச்சிலிருந்து:
புதிய நாடாளுமன்றம் தொடங்கப்பட்ட நாளன்றும், குடியரசுத் தலைவர் இங்கு உரையாற்ற வந்தபோதும், செங்கோல் முக்கியப் பங்கு வகித்துள்ளது மனதுக்கு நிறைவாக உள்ளது. என்றென்றும் இது நினைவு கூறப்படும்.
குடியரசுத் தலைவர் புதிய நாடாளுமன்றத்திற்கு உரையாற்ற வந்தபோது அவருக்கு முன்பாக செங்கோல் சென்றது. நாம் அதைப் பின் தொடர்ந்து சென்றோம். இந்த புனிதமான தருணத்திற்கு நாம் எல்லோரும் சாட்சியாக இருந்தோம் என்பது மிகப் பெரிய சந்தோஷம். புதிய பாரம்பரியத்தை நாம் தொடங்கி வைத்துள்ளோம். ஜனநாயகத்திற்கு கெளரவம் சேர்த்துள்ளோம்.
உங்களில் (எதிர்க்கட்சிகள்) பலர் தேர்தலில் போட்டியிடும் தைரியத்தை இழந்திருப்பதை உணர்கிறேன். கடந்த முறை பலர் தொகுதி மாறி போட்டியிட்டீர்கள்.. இந்த முறையும் அதேபோல பலர் தொகுதி மாறத் திட்டமிட்டுள்ளதாகவும் கேள்விப்பட்டேன். பலர் லோக்சபா தேர்தலில் போட்டியிடாமல், ராஜ்யசபா வழியாக இங்கே வர முடிவு செய்திருப்பதாகவும் அறிகிறேன்.
எதிர்க்கட்சிகள் இப்படியே எதிர்க்கட்சியாகவே இருக்க வேண்டும் என்று உறுதி பூண்டு செயல்படுகிறார்கள். அந்த மன உறுதியை நான் பாராட்டுகிறேன். நீண்ட காலமாக ஆளுங்கட்சியாக அமர்ந்திருந்த நீங்கள் இப்போது நீண்ட காலம் எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்க விரும்புகிறீர்கள். மக்கள் உங்களுக்கு ஆசிர்வாதம் வழங்குவார்கள்.
எதிர்க்கட்சியாக இருந்தும் கூட அவர்கள் தங்களது பொறுப்புகளை சரியாக செய்யவில்லை என்பதுதான் வேதனையானது. அதனால்தான் நான் எப்போதும் சொல்வதுண்டு, நாட்டுக்கு நல்லதொரு, பொறுப்பானதொரு எதிர்க்கட்சி தேவை.
குடியரசுத் தலைவர் உரையில் சிறுபான்மையினருக்கு எந்த அறிவிப்பும் இல்லை என்று சில உறுப்பினர்கள் பேசினார்கள். மீனவர்கள் சிறுபான்மையினர் இல்லையா.. கால்நடை மேய்ப்பவர்களுக்கு உங்களது மனதில் சிறுபான்மையினராக இடம் கொடுக்கப்படவில்லையா.. விவசாயிகளை சிறுபான்மையினராக நீங்கள் அங்கீகரிக்கவில்லையா.. பெண்களுக்கும் கூட அந்த இடத்தை எதிர்க்கட்சிகள் கொடுக்கத் தயாராக இல்லையா.. என்னாச்சு உங்களுக்கு? இன்னும் எத்தனை காலம்தான் இந்த சமூகத்தை பிரித்துக் கொண்டே இருக்கப் போகிறீர்கள்?
வருகிற லோக்சபா தேர்தலில் 400 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெல்லும். தேசிய ஜனநாயகக் கூட்டணி வெல்லும். மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அடுத்த 1000 ஆண்டுகளுக்கு திட்டமிடுவோம் என்றார் பிரதமர் நரேந்திர மோடி.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}