சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தது குறித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதுகுறித்து விரிவான முறையில் 2 அறிக்கைகள் மூலம் விளக்கம் கொடுத்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 2 நாட்களாக திமுக அரசை விமர்சித்து மட்டும் அறிக்கை விடுத்து வருகிறார்.
நேற்று ஒரு அறிக்கை விடுத்து திமுக அரசுக்குக் கண்டனம் தெரிவித்திருந்தார். இன்று காலை இன்னொரு கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார். நேற்று திமுக அரசுக்குக் கண்டனம் தெரிவித்த அறிக்கையைத் தவிர்த்து வேறு எந்தப் பதவிவையும் அவர் போடவில்லை. இன்று முதல் அறிக்கையாக திமுக கண்டனம் வந்துள்ளது.
பாஜகவுடன் நெருக்கமாக இருப்பவர் ஓ.பி.எஸ். பிரதமர் மோடியின் அன்பையும் பெற்றவர். ஆனால் அதிமுகவுடன், பாஜக மீண்டும் கூட்டணி சேர்ந்ததைத் தொடர்ந்து ஓபிஎஸ்ஸுக்கு பாஜக வட்டாரத்தில் நெருக்கம் குறைந்து விட்டதாக கூறப்படுகிறது. ஓபிஎஸ் கேட்ட சில விஷயங்களை பாஜகவால் செய்ய முடியாமல் போனதால் (அதிமுக எதிர்ப்பு காரணமாக) ஓபிஎஸ் அதிருப்தி அடைந்தார். பிரதமரைக் கூட பார்க்க முடியாமல் செய்து விட்டா்களே என்று புழுங்கியுள்ளார்.
இந்த நிலையில்தான் முதல்வர் மு.க.ஸ்டாலினை போய் நேரில் பார்த்துப் பேசி விட்டு வந்தார். வெளியில் வந்தவர், அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நிரந்தர நண்பரும் இல்லை என்றும் அவர் சொல்லி விட்டுப் போக புகைய ஆரம்பித்து விட்டது. பாஜக தரப்பிலிருந்து உடனடியாக தொடர்பு கொண்டு எந்த முடிவையும் எடுக்காதீர்கள், எங்கேயும் போகாதீர்கள். பிரதமரைப் பார்க்கலாம், பொறுமையாக இருங்கள் என்று சொல்லப்பட ஓபிஎஸ்ஸும் பின்வாங்கினார்.
முதல்வரை சந்தித்தது குறித்து அரசியலாக்கக் கூடாது என்று அறிக்கை விட்டார். தனது ஆதரவாளர்களையும் கருத்து கூறாமல் அமைதியாக இருக்குமாறு உத்தரவிட்டார். இப்போது அவரும் அமைதியாகி விட்டார். ஆனால் திமுக அரசுக்குக் கண்டனம் தெரிவித்து மட்டும் அறிக்கை விடுத்து வருகிறார். நேற்று அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பல் மருத்துவரே இல்லாத அவல நிலையை உருவாக்கியுள்ள தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம் என்று ஒரு அறிக்கை விடுத்திருந்தார். இதைத் தவிர நேற்று வேறு எந்தப் பதிவையும் அவர் போடவில்லை. இன்று, சென்னைப் பல்கலைக்கழக அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் ஊதியத்தை குறைக்க நடவடிக்கை எடுத்திருக்கும் திமுக அரசுக்குக் கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை விடுத்துள்ளார்.
ஓபிஎஸ்ஸிடம் காணப்படும் இந்த மாற்றம் பல்வேறு செய்திகளை வெளிப்படுத்துவதாக உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழகத்தில் இன்று16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
மாம்பழ விவசாயிகளின் நலனுக்காக... பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள்... அம்பலமான திமுக அரசின் புளுகு: அன்புமணி காட்டம்
4 ஆண்டுகளாக அரசு முடங்கிக் கிடந்ததற்கு, இப்போது நடக்கும் கண்துடைப்பு முகாம்களே சாட்சி: அண்ணாமலை
ஆந்திராவில் பிரம்மாண்ட ஏஐ மையம் அமைக்கும் கூகுள்... இன்று ஒப்பந்தம் கையெழுத்து!
பொண்டாட்டி இலவசம் என்று கூறுவதா.. மனிதராகவே இருக்கத் தகுதியற்ற சி.வி. சண்முகம்.. அமைச்சர் கீதா ஜீவன்
முதல்வர் நிதீஷ் குமார் வீட்டின் முன் போராட்டம்.. சீட் கிடைக்காததால் ஜேடியு எம்.எல்.ஏ தர்ணா
பீகார் சட்டசபைத் தேர்தல்.. இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தொடரும் இழுபறி
41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!
{{comments.comment}}